ஒஸாமா வபாத்தாகி ஒருவருட நிறைவு - மேற்கு நாடுகளில் பீதி, பாதுகாப்பு அதிகரிப்பு
அல்ஹைதா தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. எனவே, இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அல் கொய்தாகள் தாக்குதல் நடத்தக் கூடும் என அமெரிக்கா கருதுகிறது.
இதையோட்டி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை விடுத்துள்ளது. பொதுவாக அல்ஹைதாகள் தங்கள் உடலில் வெடி குண்டுகளை கட்டி அவற்றை ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்து தற்கொலை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டுகளில் உலோக துண்டுகள் கலக்கப்படுவதால் கடுமையான சோதனைகளின் போது தற்கொலை அல்ஹைதா கண்டுபிடிக்கப்படுகின்றனர். இதன் மூலம் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. எனவே, அதற்கு மாற்று நடவடிக்கையை அல்ஹைதாகள் கையாளுவதாக அமெரிக்க உளவுத்துறை கருதுகிறது.
அதாவது உலோகங்களால் தயாரிக்கப்படாத வெடிகுண்டு தயாரித்து அதை ஆபரேஷன் மூலம் வயிற்றுக்குள் வைத்து எடுத்து வந்து வெடிக்க செய்ய திட்டமிட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது சாத்தியம் என்பதை டாக்டர்களும் தெரிவித்துள்ளனர்.
எனவே பின்லேடன் கொல்லப்பட்டு ஓராண்டு ஆனதை தொடர்ந்து பழிக்கு பழிவாங்கும் நோக்கில் இது போன்ற தாக்குதலில் அல்ஹைதாகள் ஈடுபடலாம். வயிற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி குண்டுகளுடன் விமானங்களில் பயணம் செய்து அவற்றை தகர்த்து பெரிய விபத்துக்களை ஏற்படுத்தலாம். எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சோதனைகளை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு துறையின் செய்தி தொடர் பாளர் பீட்டர் போகார்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏமனை சேர்ந்த அல்கொய்தா இப்ராகிம் அல்-அசிரி அது போன்று உலோகம் இல்லாத குண்டை தயார் செய்து உடலில் மறைத்து வைத்து விமானத்தில் பயணம் செய்ததை அவர் நினைவு கூர்ந்துள்ளார். எனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.
தங்களுக்கு தேவைஎன்றால் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிஅதைப் பயங்கரவாதமாக
ReplyDeleteமாத்தி ,இஸ்லாமிய ,அரபு நாடுகளுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை கொலை செய்து தங்கள் ஆட்டத்திற்கு ஆடக்கூடிய அடி முட்டாள் ஆட்சியை நிலை நாட்டுவதே கிருஸ்தவ ,யூத வழி.அதற்கு ஏற்றால்போன்று நமக்குள் ஷியா ,சுன்னாஹ் மற்றும் ஜமாத்துகளின் பெயர்களைக் வைத்து பிரிந்து இருக்கிறோம் .நமக்கு ஒரு கலிபாஇன்ஷா அல்லாஹ்
வருவார்(நபி ஈஷா ) . நாம் தொழுது துஆ கேட்போம் .நம் அனைவரையும் செய்த்தானுடைய தீங்குகளை விட்டும் அல்லாஹ் பாதுகப்பனாக .
Meeran
Bro Meeran, தயவு செய்து ஷீயாக்களை இங்கே சேர்க்க வேண்டாம்.
ReplyDeleteஅவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்ட ஒரு
பிரிவினர் என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
ஈரானில் வாழும் (சுன்னி) முஸ்லீம்களின் இஸ்லாமிய நிலைமை, இஸ்ரவேலுக்கு
அடுத்த படியான மோசமான நிலையில் உள்ளது என்பதே உண்மை. ஷீயாக்களின்
பிரச்சார ஊடகங்களும், யூதர்களின் பிரச்சார ஊடகங்கள் அளவுக்கு பலமானவையாக
இருப்பதனால் ஈரானின் (சுன்னி) முஸ்லீம்கள் பற்றிய உண்மைகள் வெளிவருவதில்லை.