Header Ads



இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்த சர்வதேச மாநாடு

இஹ்வான் தமிழ்

சர்வதேச முஸ்லிம் அறிஞா்கள் ஒன்றியமும் துானுாஸியாவின் ஸைத்துானா பல்கலைக் கழகமும் இணைந்து நடாத்தும் இஸ்லாமிய சிந்தனையை புனரமைக்கும் சர்வதேச மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இஸ்லாமிய இயக்கங்கள் அதிகாரத்திற்கு வந்திருக்கும் ஒரு சூழலில் இஸ்லாமிய அரசியல் சிந்தனையுடன் தொடா்பான விவகாரங்களை ஆய்வுசெய்வதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சர்வதேச முஸ்லிம் அறிஞா்கள் ஒன்றியத்தின் தலைவா் கலாநிதி யூசுஃப் அல் கர்ளாவி அவா்கள் ” இஸ்லாமிய அரசியலை புனரமைக்க வேண்டிய தேவையில் இப்போது நாமிருக்கிறோம். இஸ்லாமிய அரசியல் தொடா்பாக எழுதப்பட்டவைகள் அனைத்தையும் நாம் தொகுக்க வேண்டியுள்ளது. அரசியல் பகுதியில் எழுதப்பட்ட சர்வதேச ஆய்வுகளிருந்து நாம் பயனடைய வேண்டும்” என்றார். 

இது தொடா்பில் கருத்து வெளியிட்ட அந்-நஹ்ழா இயக்கத்தின் தலைவா் ஷெய்க் ராஷித் அல் கன்னுாஷி அவா்கள் ”பலவருடங்களாக தஃவா பற்றிய பிக்ஹில் ஈடுபட்டிருந்ந இஸ்லாமிய இயக்கங்கள் இன்று நாடு பற்றிய பிக்ஹை நோக்கி வந்து நாட்டை ஆளுதல் தொடா்பான  பிக்ஹை நோக்கி நகர்ந்துள்ளன. ஆட்சி பற்றிய பிக்ஹ் எமது இஸ்லாமிய வரலாற்றில் இதுவரை வளர்ந்திருக்கவில்லை” என்றும் அவா் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.