தம்புள்ள நெருக்கடியும், பன்முக கலாசாரமும்
கலாநிதி தாரிணி ராஜசிங்கம் சேனநாயக்கா
மொழிபெயர்ப்பு - எஸ்.குமார்
மதங்களின் கூட்டாண்மையான பெருமைக்குரிய ஒரு மரபை ஸ்ரீலங்கா நீண்டகாலமாக தன்னகத்தே கொண்டுள்ளது,அது நாடு முழவதிலுமுள்ள பல மதங்களினதும் புனித தலங்களினாலும், அதேபோல தனித்துவமான புவியல் கலாச்சாரக் கலவைகளினாலும் சாட்சிப்படுத்தப்படுகிறது.
சமீபத்தில் நாம் கண்கூடாகக் கண்ட தம்புள்ள மசூதி நெருக்கடிக்கான சரியான தீர்வு, பாரம்பரிய வளர்ப்பாக வந்த சமயங்களை சமரசமாக இணைத்து அதைப் பாதுகாப்பதுடன்,பல்லினத்தன்மை மற்றும் கூட்டாண்மை என்பனவற்றை நாட்டில் ஏற்படுத்துதலே.
பௌத்தர்கள், கிறீஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும் முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் வரலாற்று ரீதியாக பொது இடங்களை பகிர்ந்து வந்திருக்கிறார்கள். பல வருடங்களாக நடைபெற்று முடிந்த மோதல்களுக்குப் பின்பு இந்த நிமிடம் நமக்கு தேவையாக இருப்பது நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு, என்பவைகளே.நிறுவப்பட்ட ஆலயங்கள் அல்லது வணக்கத்தலங்கள் மீது பாகுபாடு காட்டுவது அல்லது அவைகளை அகற்றுவது ஒரு எதிர்மறையான மத மற்றும் இன சுத்திகரிப்பு வடிவத்துக்கு முன்னோடியாக அமைந்துவிடும்.
கதிர்காமம்,மன்னாரிலுள்ள மடு தேவாலயம்,மற்றும் சிவனொளிபாதமலை போன்றவை புகழ்பெற்ற புராதன பல்சமய வழிபாட்டு தலங்களாகும்,அங்கெல்லாம் இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் அதேபோல முஸ்லிம்கள் மற்றும் கிறீஸ்தவர்கள் ஆகிய அனைவரும் பலநூற்றாண்டுகளாக ஒருமித்து வணங்கி வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் வரலாற்று பதிவுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக கதிர்காமத்தில் ஒரு புராதன இஸ்லாமிய மறை மெஞ்ஞானியர்க்குரிய சுபி கோவில் உள்ளது, இந்து மற்றும் பௌத்த தேவதைகளின் ஆலயங்கள் மற்றும் அது தொடர்பான மதக் கட்டிடங்களையும் உள்ளடக்கிய புனித பிரதேசமாக கதிர்காமம் உள்ளது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கால நிருவாகிகளில் ஒருவரான ஜோண் ஸ்ரில், ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு 1911ம் ஆண்டு எழுதப்பட்ட ஜங்கிள் டைட் (காட்டு அலை) எனும் தனது நூலில் பதிவு செய்திருப்பது, ஒரு முஸ்லிம் தந்தை தனது நோய்வாய்ப்பட்ட மகனை நோய்களை குணப்படுத்துவதில் சக்தி வாய்ந்த மடுத் தேவாலயத்துக்கு அழைத்து வந்ததுக்கு தான் சாட்சியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மத்திய மலைநாட்டில் உள்ள ஸ்ரீபாத எனும் சிவனொளிபாதமலையும் ஒரு பல்சமய வழிபாட்டிடமாகும்.சமகால மதவழிபாட்டு நடவடிக்கைகளில் பெரும்பான்மையான ஸ்ரீலங்காவாசிகள் பன்மைத்தன்மை கொண்டவர்களாகவும் மற்றும் நடைமுறைக்கு ஏற்றவர்களாகவும் உள்ளதுடன், பல்வகை சமயத் தலங்களுக்கு தானம் வழங்குவதற்கு மற்றும் பல்வேறு கடவுள்களின் ஆசிகளைப் பெற்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக பல்வேறு சமயத்தலங்களையும் ஈர்க்க முயல்கிறார்கள். கொழும்பில் ஒரு சிறிய வீதியிலேயே கோவில்,மசூதி,விகாரை,மற்றும் தேவாலயம் என்பன அடுத்தடுத்து இடம்பெற்றிருப்பதை காண்பது அத்தனை கடினமல்ல (உதாரணம்: மயுரா இடம்).
உண்மையில் ஸ்ரீலங்கா உல்லாசப் பிரயாணச்சபை தனது சந்தை வாய்ப்பை பெருக்குவதற்காக லங்காவின் தனித்தன்மையான பல மதக் கலாச்சாரங்களைப் பற்றி அதன் விளம்பர கையேடுகளில் இவைகளை லங்காவின் பௌத்த பாரம்பரியங்களுடன் சேர்த்து விளம்பரப்படுத்தியுள்ளது. தற்போது தம்புள்ளயில் உள்ள ஒரு மசூதி மற்றும் ஒரு கோவில் என்பனவற்றை அங்கிருந்து வேறிடத்துக்கு மாற்;ற செய்த முயற்சிகள் ஏற்படுத்திய நெருக்கடியை தீர்ப்பதற்கான எந்தவிதமான பேச்சுவார்த்தை, பேரம்பேசல்,மற்றும் தீர்வுகளுக்கான அடிப்படை ஆதாரம் இந்த வரலாற்று சான்றுகள்தான். துரதிருஷ்டவசமாக யுத்தம் நடைபெற்றபோது நூற்றாண்டுகளாக இருந்த மதங்களின் கூட்டு, இன - ஆயுத நடிகர்கள் மற்றும் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த தேசிய அரசியல்வாதிகள்,அதேபோல அரசியல் மயமான மத நிறுவனங்கள் என்பனவற்றால் சிறிதுசிறிதாக அரிக்கப்பட்டு விட்டன.
தற்போதைய சர்ச்சை வெளிப்படுத்துவது,கலை,கலாச்சார நிறுவனங்களை தீவிரமாக முன்னேற்றுவதற்கும், மற்றும் பன்முக கலாச்சாரத்தை பிரதான நீரோட்டத்தில் இணைப்பதற்கும் அதேபோல யுத்தம் முடிவுற்றதின் பின், தேசிய கல்விமுறை மற்றும் பாடத்திட்டங்களை முன்னேற்றுவதற்கும் பரவலான பிரதான தேசிய கொள்கை, மற்றும் நிறுவனத் தகுதி மற்றும் கட்டமைப்பு என்பன அவசியம் என்பதையே. எப்படி இருந்தாலும் அப்படியான ஒரு ஆரம்பமுயற்சி யுத்தத்தின் பின்னான சமரசத்துக்கு மிகவும் அவசியம், அதனால்தான் முப்பது வருடங்கள் நடந்த ஆயுதமோதல்களினால் செல்லரித்துப்போன தனது பெருமை வாய்ந்த பல மதக் கூட்டினையும் மற்றும் பன்மைத் தன்மையையும் நாடு திரும்பவும் பெறமுடியும்.
சர்ச்சைகள் உருவாகும்போது,இன மத ஒற்றுமையின் நலனைக் கருத்தில் கொண்டு இருதரப்பு நம்பிக்கையான பேச்சுவார்த்தைகள்,மற்றும் பேரம் பேசல்கள் என்பனவற்றின் வழமையான இடைவெளி அவசியமாகவுள்ளது. இதை தேசிய மொழி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு, சம்பந்தப்பட்ட சிவில் சமூக அமைப்பு நிபுணர்கள், மற்றும் தகுதியுள்ள நிறுவன அமைப்புகள், சிலவேளைகளில் யுனஸ்கோ என்பனவற்றின் உதவியுடன் கூட்டப்படுவதுதான் சிறந்ததாக இருக்கும்.அதேபோல அரசியல்வாதிகள் மற்றும் சமயத்தலைவர்கள் உள்ளுர் சமூகங்கள் மற்றும் சிறுபான்மையோருக்கு மதிப்பளிக்கும் அதேவேளை,பொதுமக்களிடம் சகிப்பு தன்மையையும், பொது மத வழிபாட்டு இடங்களை பங்குபோட்டுக் கொள்ளும் பழக்கத்தை வளர்க்கவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
தம்புள்ள கலாச்சார முக்கோணத்தின் ஒரு பகுதியாகும் அது உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி,சமூக,மற்றும் கலாச்சார அமைப்பினால் (யுனஸ்கோ) வரையறுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள அநேக உலக பாரம்பரிய கலாச்சார முக்கோண இடங்களைப் போலவே இதுவும் லங்காவின் இந்து - பௌத்த மதங்களின் கலப்புக் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறந்த கோவில் வளாகத் தொகுதிகளான கம்போடியா மற்றும் போராபடூர் ஆகிய இடங்களில் உள்ள அங்கோர் வாற் மற்றும் அங்கர் தோம், மற்றும் இந்தோனசியாவில் ஸ்ரீ விஜயாவின் காலந்தொட்டே அருகருகே அமைந்துள்ள பௌத்த, மற்றும் இந்து கோவில் வளாகங்கள் என்பனவற்றுக்கு இது சமமானதாகும்.
இந்தியா மற்றும் சமகால நேபாளம் என்பனவற்றில் உள்ள சில இந்துமத மரபுகளை பௌத்தம் விமர்சனத்துக்கு உள்ளாக்கியபோதும்,பௌத்தம் மற்றும் இந்து மதம் என்பன ஒரே மதப் பாரம்பரியங்களைக் கொண்டவை என்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். சங்கமித்தா யாழ்ப்பாணத்தில் வந்திறங்கியதுடன், தமிழ் நாட்டிலிருந்துதான் பௌத்த மதமும் ஸ்ரீலங்காவுக்கு வந்தது, வாதப்படி பார்த்தால் அது தமிழ்நாட்டிலிருந்துதான் லங்காவுக்கு வந்தது என்றால் அது சிங்களமயமாவதற்கு முன்னால் தமிழாகத்தான் இருந்தது. பௌத்த மதமும் மற்றும் இந்து மதமும் தென்கிழக்கு ஆசியாவில உள்ள மற்ற இடங்களைப்போல, ஸ்ரீலங்காவிலும் நூற்றாண்டுகளாக கூட்டாக இணைந்து இருந்தன.
லங்காவில் பல்வகை கலாச்சார ஒன்றிணைவின் அழிவு
நூற்றாண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்காவில் மதக் கலாச்சாரம் ஒன்றிணைந்திருந்தது,மோதல் நடைபெற்ற வருடங்களில் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்ட இன மத உள்ளக தொடர்புகள் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கிற கருத்தில் முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களை இன சுத்திகரிப்புக்கு உட்படுத்தும் கொள்கைகளினாலும், அதேபோல அதை முன்னேற்றுவதற்கான கொள்கைகளின் குறைபாடு, மற்றும் பிரதான பகுதிக்கு தேவையான இரண்டாம் மற்றும் மூன்றாந்தர கல்வி அமைப்புகளில் உள்ளகுறைபாடு, பன்முகக் கலாச்சாரம் மேலும் ஸ்ரீலங்காவின் நல்லுறவு மற்றும் உடனிருப்பு என்பவவைகளை உறுதி செய்வதற்கான முயற்சிகள் என்பனவற்றின் குறைபாடுகள் காரணமாக அந்த மதக் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றது. கடந்தகால பன்முகக் கலாச்சாரத்தை மீளப்பெறுவது மற்றும் மீண்டும் ஒரு முறை உள்ளுர் சமூகங்களை மதித்து பொது வழிபாட்டு தலங்களை பங்கு போட்டுக் கொள்வது போன்றவை யுத்தத்தின் பின்னான கற்றுக் கொள்ளவேண்டிய சவால்களாக உள்ளன.
2003ல் ஸ்ரீலங்காவின் பல பிரதேசங்களிலும் ஆலோசனைகள் நடத்தியபிறகு வடிவமைக்கப்பட்ட “ஸ்ரீலங்காவின் சமாதானத்துக்காக பன்முகக் கலாச்சாரத்துக்கான தேசிய நோக்கு” அதன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது:
“ஸ்ரீலங்கா அதன் பெருமைமிக்க சமூக வேற்றுமைகள் மற்றும் பல்வேறு சமூகங்களின் கூட்டு இருப்பு என்பனவற்றுக்கு நீண்டகாலமாக புகழ் பெற்றது.எனினும் சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டு,குறிப்பிடத்தக்க பாரம்பரிய கண்ணோட்டத்தை உள்ளடக்கிய தேசிய நோக்கத்தை ஏற்றுக் கொள்வது மற்றும் வரையறை செய்வது என்பதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது,அதற்கு பதிலாக பிரிவினைஅரசியல், சமூக, கலாச்சார,அரசியல்,பொருளாதார பேதங்களை உருவாக்கி உள்ளதுடன்,வன்முறை ஆயுத மோதல்களையும் தோற்றுவித்துள்ளது.இரண்டு தசாப்தங்களாக வடபகுதியில் இன மொழி வேறுபாடுகளை முதன்மை கவனமாகக் கொண்டு நீண்டு நின்ற ஆயுத மோதல்கள்,வர்க்க பேதத்தை முதன்மை கவனமாக கொண்டு தெற்கில் எழுந்த கிளாச்சிகள், என்பன பிரதிபலிப்பது,காலனித்துவத்துவத்தின் பின்னான தேசிய பார்வை மற்றும் மூலோபாயங்களின் குறைவினையும் மற்றும் அதிகாரம்,செல்வம் என்பனவற்றின் பிராந்திய விநியோகத்தில் உள்ள நியாயமற்ற தன்மையையும்.
இதற்காக நாங்கள் முன்மொழிவது, சகல குழுக்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவம் என்பனவற்றின் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட,வேறுபட்ட மதங்கள் மற்றும் கலாச்சாரங்களின் தன்மைகளுக்கு மதிப்பளிக்கத் தக்கதான புதுப்பிக்கப்பட்ட சகலதையும் உள்ளடக்கிய ஒரு பன்முகக் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதையே.இங்கு எங்களின் முயற்சி,மோதல்களின் அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணும் அதேவேளை கடந்த தசாப்தங்களில்;
இடம்பெற்ற வன்முறைகள் நாட்டின் வரலாற்று பெருமைமிக்க பன்முகக் கலாச்சார சமூகத்திற்கு ஏற்படுத்திய ஆழமான ரணங்களின் வடுக்களை அங்கீகரிப்பதுமாகும்.
இடம்பெற்ற வன்முறைகள் நாட்டின் வரலாற்று பெருமைமிக்க பன்முகக் கலாச்சார சமூகத்திற்கு ஏற்படுத்திய ஆழமான ரணங்களின் வடுக்களை அங்கீகரிப்பதுமாகும்.
சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சி நடத்தியவர்களினால் ஏற்படுத்தபடுத்தப்பட்ட கலாச்சார மற்றும் அரசியல் பாகுபாடுகள்,சமமான அபிவிருத்திக் கொள்கைகளின் குறைபாடுகள், மற்றும் உள்ளுர் கலாச்சார அறிவுகளுக்கு மதிப்பளிக்காமை போன்றவை நாட்டை குணமடைய முடியாத நோயாளியாக்கிவிட்டது. போட்டி மனப்பான்மையுள்ள இன மற்றும் மத அரசியல், காலனித்துவ காலத்துக்கு பின்னான ஸ்ரீலங்காவின் நிறுவன மயமாக மாறிவிட்டன. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் நடத்தும் கொடுங்கோலாண்மையின் பிரதிநிதித்துவம் ஆகிவிட்டது,அதேவேளை அரசியல் கலாச்சாரம் அனுமானிக்கும் நோக்கம் சரியானதுதான் என்கிற எண்ணம் தீவின் பலபாகங்களிலும் நிலைகொண்டுள்ளது.
போரின்போது இரண்டு பகுதியினரும் வேண்டுமென்றே பன்முகக் கலாச்சாரத்தின் கூட்டு இருப்பை சிதைத்தது, வாக்குவங்கிகளைக் கைப்பற்றி அதிகாரத்தை அடையவேண்டும் என்பதற்காக இன மற்றும் அரசியல் துருப்புச்சீட்டுகளை விளையாடும் அரசியல்வாதிகள் தங்கள் நலன்களுக்காக நாட்டின் யுத்தச்சுமையை அதிகரித்தது போன்ற நேரங்களும் இருந்தன.எனினும் நூற்றாண்டு காலமாக துணைக் கண்டத்தில் நிலவும் இந்துசமயம் மற்றும் பௌத்த மதத்தின் பொதுவான பாரம்பரியத்தின் கூட்டு இருப்பு மற்றும் சகிப்புத்தன்மை, என்பனவும் போரின் கடினமான காலப்பகுதியிலும் உயிர்வாழ்ந்த இந்து - பௌத்த உறவுகள்,போருக்கு பின்னான காலப்பகுதியில்,இராணுவ அக்கிரமிப்பின் எழுச்சியினால் அதிகரித்த அழுத்தங்களுக்கு ஆளாகியுள்ளது. காணிகளை கைப்பற்றும் ஒருவித வடிவமைப்பானது, ஸ்ரீலங்காவில் நூற்றாண்டு பழமையான கலாச்சார மற்றும் மத கூட்டாண்மையை அழிப்பதுடன், உயர்ந்த சகிப்புத்தன்மையை கொண்ட மதமான பௌத்தத்துக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்துகிறது”.
லங்காவில் உள்ள கலப்பு கலாச்சாரத்தன்மையான புவியல் அமைப்பின் பன்முக கலாச்சாரம்
ஸ்ரீலங்காவின் சமாதானத்துக்கான தேசிய பார்வை பன்முக கலாச்சாரத்தைப்பற்றி இப்படி சொல்கிறது,
“ஸ்ரீலங்கா பன்மையான பன்முக கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நாடு. பன்முக கலாச்சாரம் என்று இங்கு குறிப்பிடப்படுவது, மும்மொழிப் பண்பாடு கொண்ட (சிங்கள,தமிழ்,மற்றும் ஆங்கிலம் என்பனவும், வேடுவப் பாஷை உட்பட்ட பிராந்திய மொழிகள் பேசும்) தீவின் கலாச்சார பிரிவுகள் உட்பட்ட, நான்கு பெரிய மதங்களையும் (இந்து,பௌத்தம்,இஸ்லாம்,மற்றும் கிறீத்தவம் மற்றும் அவர்களின் பிரிவுகள்,அதேபோல அவர்களின் பூர்வீக தெய்வங்கள் மற்றும் ஆவி நம்பிக்கைகள்),தேசிய சனத்தொகை கணக்கெடுப்பின்படி அங்கீகரிக்கப்பட்ட ஆறு இனப்பிரிவினரும்,மற்றும் சில எண்ணிக்கையிலான ஒன்றுடன் ஒன்று பிணைந்த கலப்பினச் சாதிகளும் மற்றும் துணை சாதிகளும் உள்ளன.
மொழியியல், இனம், பிராந்தியம்,மற்றும் சமயம் என்பனவற்றின் கூறுகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு தேசிய இனக்குழுக்கள், அதாவது பறங்கியர்கள்(டச்சு மற்றும் போர்த்துக்கீய), சிங்களவர்கள்(கண்டிய மற்றும் கீழைத்தேச),தமிழர்கள்(ஸ்ரீலங்கா மற்றும் மலையாள), முஸ்லிம்கள் (மூர் மற்றும் மலாய்),பார்சியர்கள்,கொழும்பு செட்டிகள், வண்ணியலாட்டோ (வேடர்கள்) போன்ற மற்றும் பலரும் குறிப்பிடத்தக்க அடையாளத்துடன் வெளிப்பட்டுள்ளனர்,இவர்களில் அநேக பிரிவினர்கள் தனித்தன்மையான துணைப் பிரிவினராக தொகுக்கப்பட்டுள்ளார்கள்.மேலதிகமாக தீவின் சனத்தொகை,பால்,வகுப்பு, பிராந்திய கலாச்சாரம்,போன்ற வகைப்படுத்தல்களின் கீழ் பகுத்தறியும் பொருட்டு உப பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் கலாச்சார வேறுபாடுகள் மற்றும் சிக்கலான கலப்பு அடையாளங்கள் என்பன தனித்தன்மையானவை அல்ல.அநேகமான நவீன நாடுகள் பன்மைத்தன்மை,வேறுபாடு மற்றும் சிக்கல்களை கொண்டதாகவே இருக்கின்றன.
எனினும் காலனித்துவ காலத்துக்குப்பின் வேறுபாடுகள் ஒரு பரிசாக அமைவதற்குப் பதில் ஒரு அச்சுறுத்தலாகவே உருவெடுத்துள்ளன. இதன் விளைவு சிறிய மற்றும் சக்தி குறைந்த குழுக்களை, மொழியியல்,இன,மத,சாதி,மற்றும் வகுப்பு அடிப்படையில் வரம்புக்கு உட்படுத்தி மற்றும் பாகுபாடு காண்பிக்கப்படுவதுடன் வன்முறை அரசியல் முரண்பாடுகளை பல்வேறு வடிவங்களில் உருவாக்குவதற்கும் வழி செய்கிறது.இதன் திருப்பமாக அநேகமான இந்த முரண்பாடுகள் கலவரங்கள்,தாக்குதல்கள் கட்டாய இடப்பெயர்வு,அல்லது ஒரு சமூகத்தவர் குடியிருந்த பிரதேசங்களில் மற்றவர் குடியேற்றங்களை நிகழ்த்துவது,மற்றும் ஒரு இனக்குழுவின் ஆதிக்கத்திலிலுள்ள பிரதேசங்களில் மற்ற இனத்தவர் குடியிருப்புகளை மற்றும் எல்லைகளை அமைத்தல் போன்ற விளைவுகளிலேயே முடிவடைந்திருக்கின்றன.
ஸ்ரீலங்காவின பண்டைய பன்முக கலாச்சாரத்தை மற்றும் கலப்பு கலாச்சார புவியியல் தன்மையை அங்கீகரிப்பது,என்பது ஒரு பகுதியில் உள்ள பெரும்பான்மைக் குழுவானது, அந்தக் குறிப்பிட்ட பகுதியில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாத்து மதிக்க கடமைப்பட்டுள்ளார்கள் என்பதற்கு அங்கீகாரம் வழங்குவதாக ஆகிறது. சிறுபான்மையாக உள்ள ஒவ்வொரு குழுவோ அல்லது தனிப்பட்டவரோ அவனுடைய அல்லது அவளுடைய சொந்த எல்லை,பிராந்தியம்,அல்லது சுற்றாடலுக்கு வெளியே மற்றும் அதிகரித்துவரும் ஒருங்கிணைப்புள்ள உலகமயமாக்கப்பட்ட பிரதேசங்கள் என்பனவற்றில் உள்ள தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களுடன் பாதுகாப்புடனும் மற்றும் கண்ணியத்துடனும் சுதந்திரமாக இயங்ககூடியதாக இருக்க வேண்டும்.
பிராந்திய மற்றும் உள்ளுர் பெரும்பான்மையினர் அந்த பிராந்தியத்திலுள்ள சிறுபான்மை மக்கள் மற்றும் அவர்களின் உடமைகள் சம்பந்தமான விடயங்களுக்கு மதிப்பளிப்பதுடன் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்கத் தக்க விதத்தில் அவர்களுக்கிடையில் ஒரு அதிகார சமநிலை இருக்க வேண்டும்,அதுதான் நிலையான சமாதானத்துக்கு மிக அவசியமானது. பிராந்திய மற்றும் உள்ளுர் சிறுபான்மையினரை கடந்த இருபது வருடங்களாக நடைபெற்ற ஆயுத மோதல்களின் போதும்; மற்றும் அதற்கு முன் நாட்டின் வடக்கு மற்றும் தெற்;கில் இடம்பெற்ற கலவரங்கள் நிகழ்ந்த காலத்தின் போதும், அவர்களை இனரீதியில் தனிமைப்படுத்துதல், மற்றும் இனஅழிப்பை மேற்கொள்ளுதல் போன்ற செயல்களின் வடிவத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம்.
தீவின் அநேக பன்முக மதங்கள் உள்ள இடங்களில், பல்வேறு மதத்தை பின்பற்றும் சமூகத்தினரிடையே சமாதானமான கூட்டிருப்பு வரலாறு ஒன்று இருந்ததுக்கு ஏராளமான சாட்சியங்கள் உள்ளன.இந்த பன்முக – மதங்களின் முக்கியத்துவங்கள் உள்ள இடங்கள் யாவும் மோதல்கள் யாவும் முடிவுற்றதன் பின்னர் விசேடமாக கொண்டாடப் பட்டிருக்க வேண்டும்.ஸ்ரீபாத,கதிர்காமம்,மற்றும் மடுத் தேவாலயம் போன்ற இடங்களின்; வேறுபட்ட மரபுகள் அங்கீகரிக்கப்பட்டு சமாதானத்துக்கும் ஒற்றுமைக்குமான பல மதங்களின் வலயமாக அவைகளை பிரகடனப்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த வேண்டும் என்று நாம் பிரேரிக்கிறோம்”.
இந்தச் சமயத்தில் தம்புள்ள புனிதப்பிரதேசம் நிறுவப்படுவதற்கு முன்பே அங்கு மசூதி; மற்றும் இந்துக் கோவில் என்பன நிறுவப்பட்டிருந்தன, அவை அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் இல்லை, எனவே பேச்சு வார்த்தைகள் மூலமாக அவற்றின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதுடன்,அதன் மூலமாக ஸ்ரீலங்கா தொடர்ந்தும் ஒரு பல மதங்களை கொண்ட தலங்கள் உள்ள நாடு என்பதை உறுதி செய்வது அவசியம்.மதங்களுக்கு இடையில் பொது இடங்களை பங்குபோடும் வரலாற்று உண்மையே தம்புள்ளயில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி சம்பந்தமான எந்தக் கலந்துரையாடலுக்கும் மற்றும் தீர்வுக்கும் அடிப்படைக் காரணியாக இருக்கவேண்டும்,அங்கு பௌத்தர்களையும் மற்றும் முஸ்லிம்களையும் ஒரே இடத்தில் குடியமர்த்த வேண்டும், ஏனெனில் இருபகுதியினரும் அங்கு இருப்பதற்கான உரிமையையும்,மற்றும் காணிகளின் உரிமையையும் கொண்டிருக்கிறார்கள்.
எனவே நம்பிக்கை கொள்ள வேண்டியது தம்புள்ள நெருக்கடியானது:
1.தற்போது உள்ள பன்முக மதக்கலாச்சார கூட்டிணைப்பை கட்டியெழுப்புவதுடன், மேலே குறிப்பிட்டபடி மதங்களின் கூட்டிணைப்புக்கான பெருமைமிக்க மரபினைக் கொண்ட ஸ்ரீலங்காவில் பொது இடத்தையும் மற்றும் மதங்களின் கூட்டாண்மையயும் பங்கு போட்டுக் கொள்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மதங்களின் கூட்டிருப்பான
இந்த மரபு வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித பிரதேசங்களுக்கும் மற்றும் தற்கால நடைமுறைக்கும் சாட்சியாக உள்ளவை கதிர்காமம்,ஸ்ரீபாத,யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கரையோரமாக கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செய்யும் நடைமுறை போன்றவை.
இந்த மரபு வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித பிரதேசங்களுக்கும் மற்றும் தற்கால நடைமுறைக்கும் சாட்சியாக உள்ளவை கதிர்காமம்,ஸ்ரீபாத,யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு கரையோரமாக கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செய்யும் நடைமுறை போன்றவை.
2.தம்புள்ள நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள்,சட்டத்தை மீறி,வெறுக்கத்தக்க பேச்சுக்களை பிரச்சாரம் செய்து,சமாதானத்துக்கு பங்கம் விளைவித்ததுடன்,தம்புள்ளயில் மத ஒற்றுமைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்கள்,நாட்டில் அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்தியவர்களை பொறுப்புக்கூற வைப்பதுடன்,எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காமலிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.அதேவேளை பௌத்த சங்கம்,கும்பல்களை வழிநடத்தி பௌத்தத்தின் மதிப்பையும்,சகிப்புக் கொள்கைகள் கொண்ட தம்ம,மற்றும் வினய பதங்களை மீறுவதற்கு பொறுப்பானவர்களான அத்தகைய அரசியல் சார்புள்ள புத்தமத துறவிகள் அல்லாதோரை அவர்கள் குற்றத்துக்கு பொறுப்பானவர்கள் எனக் காணும் பட்டசத்தில் அவர்கள்மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3.பிரதானமான பன்முக கலாச்சாரத்தை அதற்கு சார்பானபடி தீவிரமாக ஊக்குவிப்பதற்கும் மற்றும் நம்பிக்கையான பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தவும், பேரம்பேசல்,மற்றும் பிணக்குகள் உருவாகும்போது இன – மத நல்லுறவை ஏற்படுத்த, ஒரு அமைச்சின் தேவை உள்ளது.அத்தகைய பிணக்குகள் நாட்டிலே மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்வரை காத்திருக்க கூடாது,காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தவிரவும் சிவில் சமூகத்திலுள்ள சுயாதீனமான நிபுணர்கள்,மற்றும் சாதாரணமாக மதத் தலைவர்கள் அல்லாதவர்கள்,மற்றும் வாக்குகளை பெறுவதற்காக இனப்பிரச்சினையை துருப்புச்சீட்டாக விளையாடும் அரசியல்வாதிகள், போன்றவர்கள்;; பெரும்பாலும் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு காரணமாக உள்ளார்கள், அதிகாரமும் எல்லைகளும் இணைய வேண்டியது அவசியம்.இது முக்கியமாக ஸ்ரீலங்காவில் முப்பது வருட ஆயுத மோதல்களின் பின் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற வேண்டும். சிலவேளை தேசிய தகுதியுள்ள நிறுவனங்களை கட்டியெழுப்பி தேசிய கொள்கையாக பன்முக கலாச்சாரம், கூட்டிருப்பு மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை உருவாக்கும் பிரதானபாதையை அமைப்பதற்காக யுனஸ்கோவை உதவிக்கு அழைக்கலாம்.
இறுதியாக,2001ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் இனவாதத்துக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் உலக மாநாடு உறுதி செய்தது,”வேறுபாடு என்பது ஒரு அச்சுறுத்தல் அல்ல அது ஒரு நன்கொடை” என்று.ஸ்ரீலங்கா உல்லாசப்பயணச் சபை, தீவினைத் தனித்தன்மையான பல் மத நாடாக முன்னேற்றுவதற்கு சிறப்பாக பணியாற்ற முடியும்,அது லங்காவின் பல மத புனித பிரதேசங்களுக்கு ஒரு சுற்றுலாவை ஏற்பாடு செய்யவேண்டும்.கடைசியாக இந்த மே மாதத்தில் யுத்தம் நிறைவடைந்து 3வது வருட நினைவு நாள் வரும்வேளையில்,இந்த மாதம் முழுவதும் நல்லிணக்க மாதமாக அனுஷ்டித்து,யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான சகல மத மற்றும் இன சமூகங்களை நினைவுகூர்வதாக இந்த மாதம் அமையும் என்று நாம் அனைவரும் நம்புவோமாக.
Post a Comment