சென்னையில் இலங்கைக்கு எதிராக போராட்டம் - அனர்த்தம் தவிர்க்கப்பட்டது
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நேற்றைய தினம் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது இடம்பெறவிருந்த பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று அதிஸ்ட்டவசமாக தவிர்க்கப்பட்டதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கும் இந்து முன்னணியால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியை எரிக்க முற்பட்ட போது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த தேனாம்பேட்டை காவற்றுறையினர், போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்து, முச்சக்கர வண்டியொன்றில் வந்த இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர், முச்சக்கர வண்டிக்குள் இருந்து மஹிந்தவின் உருவபொம்மைக்கு பெட்ரோல் ஊற்றினார்.
சற்றுத் தூரம் சென்றதும் உருவபொம்மைக்கு தீ வைத்து விட்டு, சிறிலங்காத் தூதரகம் அருகே சென்று, உருவபொம்மையை வீச முயன்ற வேளை எதிர்பாராதவிதமாக முச்சக்கரவண்டியில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாரதி முச்சக்கர வண்டியை விட்டு இறங்கி ஓடித் தப்பித்துள்ளார். உருவபொம்மையை எடுத்து வந்தவர் இடது கையில் தீக்காயத்துக்குள்ளாகினார்.

பின்னர் தீயணைப்புப் படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் முச்சக்கரவண்டி முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்து, தேனாம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுக்கப்பட்டனர்.
Post a Comment