Header Ads



இலங்கை முஸ்லிம்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள் - இஸ்ரேலிய தூதுவர் பெறாமைப்படுகிறார்

இலங்கையில் இனங்களிடையே நல்லிணக்கம் காணப்படுவதுடன், அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் இருப்பதனை நேரடியாக காணமுடிந்ததையிட்டு இலங்கையின் நட்பு நாட்டின் பிரதிநிதியென்ற வகையில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை மற்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் அஸ்மன் உஷ்பிஷ் கூறினார்.

இலங்கை - இஸ்ரேல் பொருளாதாரம் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வளர்ச்சியடையுமென நம்பிக்கை தெரிவித்த இஸ்ரேல் தூதுவர், இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நேரடி விமான சேவையினை விரைவில் ஆரம்பித்து வைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் அதிக வேலை வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்படு மெனவும் அவர் உறுதியளித்தார்.
ஒவ்வொரு நாடும் தனித்துவமான இலங்கை பற்றிய அவர்களின் அபிப்பிராயங்கள் வித்தியாசப்படலாம். ஒரு ஜனநாயக நாட்டைப் பற்றி தனிப்பட்ட கருத்தினை முன்வைக்க எனக்கு உரிமையில்லாத போதும், மோதல்களுக்குப் பின்னர் ஒரு நாட்டிற்கு நிரந்தர சமாதானமும் நல்லிக்கணமும் தேவையென்பதனை நான் வலியுறுத்திக்கூற விரும்பும் அதேவேளை, நட்பு நாடு என்ற வகையில் இவற்றினை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நாம் பூரண ஒத்துழைப்பு வழங்குவோமெனவும் அவர் தெரிவித்தார்.

மோதல்கள் காரணமாக எமக்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளதனால் தற்போதைய இலங்கையர்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது என்றும் கூறினார்.

தான் இலங்கையில் தங்கியிருந்த காலகட்டத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிகவும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் தமது குடும்பதினருடன் எமது இடங்களுக்குச் சென்று பொழுதைக் களிப்பதனை தான் கண்டிருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - இஸ்ரேல் வர்த்தகர்களிடையே அறிவு, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பரி மாற்றங்களை முன்னெடுக்க எதிர்காலத்தில் வர்த்தக சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படு மெனவும் அவர் கூறினார்.

பொருளாதாரம்

மூன்று வருடங்களுக்கு முன்னர் 68 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவிருந்த இலங்கை - இஸ்ரேல் பொருளாதாரம் தற்போது 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வளர்ச்சியடைந்துள்ளது. நாம் எமது இலக்கை அடைவதற்காக இரு நாடுகளினதும் வியாபார சமூகத் தினரிடையே பரிமாற்றங்களை ஏற்படுத்து வது குறித்து கவனத்திற்கொள்ள வுள்ளேன்.

விவசாயம், உயர் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் இலங்கைக்கு பாரிய ஒத்துழைப்பினை வழங்கி வருகிறோம். எதுவுமே முழுமையாக வெற்றி பெறு வதற்கு இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கான வர்த்தகர்கள் ஒருவருக்கொருவர் முன்வருதல் அவசியமென வலியுறுத்திய தூதுவர், எதிர்காலத்தில் அதற்கு பல்வேறு வழி களிலும் ஒத்துழைப்பு வழங்குவோமென வும் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை

நேரடி விமான சேவை ஆரம்பிப்பது குறித்து இரு அரசாங்கங்களும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இச்சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும். இதற்கும் வர்த்தக சமூகத்தினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமெனவும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர். இவர் களுக்கு மாதமொன்றுக்கு ஆகக் குறைந்தது ஆயிரம் அமெரிக்க டொலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களின் உரிமை மற்றும் நலன்புரியினை முழுமை யாக பெற்றுக் கொடுக்கும் வகையில் உறுதியான சட்டத்தினை எமது அரசாங்கம் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் கட்டுமானப் பணிகள் தொடர்பான பல வேலை வாய்ப்புகள் இலங்றைணுகயர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

4 comments:

  1. இந்த கணிப்பு நல்லதற்கு இல்லை ,நம்மை சகல வழிகளிலும் அழிப்பதற்குஅடுத்த கல்லை தூக்கிப்போடுகிறான் .
    Meeran

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்கள் பொறாமையில் இருந்து எங்கள் சமூகத்தை பாதுகப்பனாக.

    ReplyDelete
  3. isreal where is this baster country. that is palesthene
    Hai brothers he is not jealous. this basket mosat brain create in muslim people trouble think properly.

    ReplyDelete
  4. Israel ?? when did it came to existence?? When was it activated on the world map??
    We dont want THE NON EXISTING ISRAEL , WE ONLY WANT THE EXISTING PALESTINE !!
    It's time for the Sri Lankans to learn the history of Palestine I think..
    We do not want any ambassador of the Israel (???)
    There is NO Israel at all !!
    If the Nasara is peeping into our matter then this is the time to learn that the Sri Lankan Muslims are their future aim, and if they can't attack us, they will use the government and other higher authorities to attack us !!
    It's time to use the Hikmah and raise the hands in prayer

    ReplyDelete

Powered by Blogger.