Header Ads



இலங்கையில் புதியவகை மணல் கண்டுபிடிப்பு - கட்டிட நிர்மாணத்திற்கும் உகந்ததாம்

SFM

அண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மணல் வகையொன்று கட்டிட நிர்மாணத்துறைக்கு பயன்படுத்த உகந்ததாக இருப்பதாக இலங்கை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி பணியகம் தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் கல்லோயா பிரதேசத்திலேயே குறித்த மணல் வகை நீர்பாசன திணைக்களத்தால் இனங்காணப்பட்டுள்ளதாக புவிசரிதவியல் பணியகத்தின் தலைவர் என்.பி.விஜயாநந்த குறிப்பிட்டுள்ளார். கட்டிட நிர்மாணத்துறை சந்தையில் குறைந்த கட்டுப்பாட்டு விலையில் மணலை விநியோகிப்பதற்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மணல் வகை உதவும் என அவர் தெரிவித்தார்.

 விநியோகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக கட்டிட நிர்மாணத்திற்கான மணலின் விலைகள் இலங்கையில் பாரியளவில் அதிகரித்து வருகின்றது. இலங்கை கட்டிடத்துறைக்கான அத்தியாவசியப் பொருளாக இருக்கின்ற மணலின் விலை அதிகரிப்பு கட்டிடத்துறைக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..

இதேவேளை, மணம்பிட்டிய, வில்கமுவ, ஹசலக்க மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களிலும், புதிய மணல் வகைகள் இனங்காணப்பட்டுள்ளன.

இதுதவிர, மஹாவலி கங்கை உள்ளிட்ட நீPர்வழிகளில் ஆழத்தை அதிகரிக்கும் நோக்கில் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராச்சி பணியகம தெரிவித்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீமெந்துகல் தயாரிக்கும் பணிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அதிக வருமானம் ஈட்டித்தரும் தொழிலாகவும் மாறியுள்ளது.

முன்னர் செங்கல்லைக் கொண்டே அதிகமான கட்டிடங்கள் அமைக்கப்பட்டு வந்தன. தற்போது சீமெந்து கல்லினால் கட்டிடங்களை அமைப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். சீமெந்து கல்லை பாவித்து கட்டிடங்களை அமைப்பதால் அதிக இலாபம் கிடைப்பதாகவும் கட்டிடங்கள் மிக உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

செங்கல் மூன்றை பாவிக்கும் தேவைக்கு சீமெந்து கல் ஒன்றையே பயன்படுத்திவருகின்றனர். ஒரு சீமெந்து பையினூடாக 90 கற்களை தயாரிக்க முடியுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர

No comments

Powered by Blogger.