Header Ads



புலிகள் விகாரையை தாக்கியதற்கும், தம்புள்ள பள்ளி தாக்கப்பட்டமைக்கும் வித்தியாசம் இல்லை

விடுதலைப் புலிகள் பௌத்த விகாரையைத் தாக்கியதற்கும், தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டமைக்கும் இடையில் வித்தியாசத்தை காணமுடியவில்லையென அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரருடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே றிஸ்வி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம்கள் என்றுமே நாட்டுப்பற்றுடையவர்கள். ஏனைய மதங்களுக்கு மரியாதை வழங்கி மதிப்பவர்கள். பள்ளிவாசல்கள் நாடடுக்கு நற்பிரஜைகளை உருவாக்கும் பயிற்சி நிலையங்களாகும். தொழுவதன் மூலம் மனிதன் தூய்மையடைகிறான். இவ்வாறான பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை எம்மால் அனுமதிக்கமுடியாது. முஸ்லிம்கள் தமது சமயத்தை உயிரிலும் மேலாக மதிப்பவர்கள்.

புலிகள் பௌத்த விகாரைகளை தாக்கியதற்கும், தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதற்கும் இடையில் நான் வேறுபாடுகுளை காணவில்லை. நாட்டின் நலக்கருதியே நாங்கள் ஜெனீவா சென்று முஸ்லிம்கள் சார்பில் குரல் கொடுத்தோம். 20 முஸ்லிம் நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்தோம்.

தம்புள்ளயில் பள்ளிவாசல் 1963 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. அதற்கான ஆவணங்கள் சகலதும் உள்ளன. சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் பெற்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடீயமா அல்லது நீதிமன்றத்தை அணுகி பிரச்சினையை தீர்த:துக்கொள்வதா என்பதை தீர்மானிக்க வேண்டுமென்றார்.

3 comments:

Powered by Blogger.