Header Ads



பிரான்ஸின் புதிய ஜனாதிபதி முஸ்லிம் நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் வருமா..??

பிரான்ஸ் முதற் பெண்மணி தொடர்பாக பாரிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.  பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் பிரான்ஷûவா ஹொலன்டே தெரிவுசெய்யப்பட்டது முதல் அந்நாட்டு வெளியுறவுத்துறை ஒரு பெரிய பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்து வருகின்றது.
ஹொலன்டே வலேரி திரியர்வெய்லர் என்பவரை இன்னும் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்.

ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பிறகு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். வளைகுடா நாடுகளுக்கும் வைதீகமான முஸ்லிம் நாடுகளுக்கும் பழமையில் ஊறிய இந்தியாவுக்கும் செல்வதாக இருந்தால் சில சங்கடங்கள் நேரும்.

திருமணமாகாத தோழியை அரசு நிகழ்ச்சிகளில் அதிகாரபூர்வ விருந்தினராக அந்த நாடுகள் அங்கீகரித்து இடந் தராது. மேலும் அவருடைய தங்குமிடம், பயணம், சாப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடுகளைச் செய்வதிலும் தயக்கம் ஏற்படும்.

எனவே மே 15இல் அரசு இல்லமான எலிஸி அரண்மனையில் குடி வருவதற்குள் ஹொலண்டேக்கு திருமணம் ஆகிவிட்டால் நல்லது என்று அவர்கள் கருதுகிறார்கள். ஜனாதிபதிக்கு வயது 57, தோழிக்கு 47 வயது.

வலேரிக்கு வயது வந்த 2 மகன்கள் இருக்கின்றனர். இதற்கு முன்னதாக 2 முறை திருமணம் செய்து 2 கணவர்களையும் விவாகரத்து செய்திருக்கிறார் வலேரி. பத்திரிகையாளராகப் பணி புரிகிறார். சார்லா புரூணியைப் போலவே கவர்ச்சிகரமானவர் என்று பத்திரிகைகள் புகழ்கின்றன

No comments

Powered by Blogger.