Header Ads



அநுராதபுர தர்கா இடிப்பு - அறிக்கை வெளியிட்டு கண்டிக்கிறது பிரித்தானியா

கடந்த செப்ரெம்பரில், பௌத்தர்களின் நகரமான அனுராதபுரத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் தர்கா தலம் ஒன்று பௌத்த காடையர்களால் அழிக்கப்பட்டதுடன், இதற்கு புத்த பிக்குகளே தலைமை தாங்கியதாகவும்  மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாயப் பணியகத்தால் கடந்தவாரம், மே 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காணாமற் போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் என்பன 2011 இறுதியில் அதிகரித்துக் காணப்பட்டதாக பிரித்தானிய வெளியுறவுச் செயலர் வில்லியம் ஹேக் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட 2011 நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மத சுதந்திரம் தொடர்பாக தற்போது இலங்கையில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தொடர்பாகவும் பிரித்தானியாவின் மனித உரிமைகள் அறிக்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் தான் விரும்பும் மதத்தை மற்றவர்களின் தலையீடுகள் எதுவுமின்றி பின்பற்றுவதற்கான உரிமை உள்ளது என்றும், ஆனால் 'இலங்கையில் உள்ள சில மத அமைப்புக்கள் தமது மதச் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் உயர்பீடம் தலையீட்டை மேற்கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும்' பிரித்தானியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'செப்ரெம்பரில், பௌத்தர்களின் நகரமான அனுராதபுரத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வணக்கத் தலம் ஒன்று பௌத்த காடையர்களால் அழிக்கப்பட்டதுடன், இதற்கு புத்த பிக்குகளே தலைமை தாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதேபோன்று இந்துக்கள் தமதுஆலயங்களில் மேற்கொள்ளும் 'மிருகங்களைப் பலிகொடுக்கும்' நிகழ்விலும் அமைச்சு மட்டத்தில் தலையீடுகள் இடம்பெற்றதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன' எனவும் பிரித்தானியா வெளியிட்ட மனிதஉரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையானது 2011 இல் இடம்பெற்ற சம்பவங்களை முதன்மைப்படுத்தியதால், தம்புள்ளவில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றை பௌத்த பிக்குகளின் தலைமையில் இடித்தழிக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக குறிப்பிடவில்லை.

No comments

Powered by Blogger.