Header Ads



றிசாத்திற்கு எதிரான குற்றச்சாட்டை மன்னார் ஆயர் வாபஸ் பெறவேண்டும் - உலமா கட்சி



தம்புள்ள தேரர் போன்றே மன்னார் ஆயரும் செயற்படுகின்றார் என்ற அமைச்சர் ரிசாத் பதியுதீனின் உவமைப்படுத்தலை சரியாக புரிந்து கொள்ளாமல் வினோ எம். பி கண்டித்துள்ளமை விடயத்தை திசை திருப்பும் முயற்சியாகும் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள தேரர் போன்று மன்னார் ஆயரும் பள்ளியை உடைத்தாரா என வினோ எம். பி வினோதமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மொழியில் உவமைப்படுத்தல் என்பது ஒன்றை மற்றொன்று நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பதில்லை. ஒரு பெண்ணை பார்த்து நின் முகம் நிலவு போன்றது என கவிஞன் கூறினால் அவளது முகத்தில் நிலாவைப்போன்று வெளிச்சம் வருகிறதா என கேட்க முடியுமா?

இங்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் ஆயரும் தம்புள்ள தேரர் போன்று இனவாதமாக செயற்படுவதை உவமைப்படுத்தியுள்ளதை குற்றம் காண்பது தமிழ் புலமைக் குறைவையே காட்டும். அ;துடன் மன்னார் ஆயர் அவர்கள் ஒரு சமய தலைவர். அரசியல் கட்சியை சேர்ந்தவர் அல்ல. 20 வருட காலத்தின் பின்  மீள் குடியேறும் முஸ்லிம்கள் அரச காணிகளில் குடியேறுகிறார்கள் என்றால் அதனை கொஞ்சம் கூட இரக்கமற்ற முறையில் மன்னார் ஆயர் பார்த்துள்ளார். ஒருவனுக்கு உணவு கிடைக்காமல் அவன் இறக்கும் நிலை வந்தால் களவெடுத்து உண்ணலாம் என வேதங்கள் கூறுகின்றன.

இவ்வாறு அரச காணிகளில் முஸ்லிம்கள் குடியேறினால் அதனை  அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். ஒரு மத குரு இது விடயத்தில் மூக்கை நுழைப்பது இனவாதம் தவிர வேறு இருக்க முடியாது. உதாரணமாக தம்புள்ள பள்ளிவாயல் சட்டபூர்வமற்றது என்றால் அதனை அரசாங்க நிர்வாகம் பார்க்கும். அதனை மீறி பௌத்த தேரர் ஆர்ப்பாட்டம் செய்தமை இனவாதமே தவிர நாட்டுப்பற்றல்ல என்பதை சாதாரண அறிவுள்ள எவரும் புரிந்து கொள்வர்.

மீள் குடியேறும் முஸ்லிம்களின்  காணிகள் ஏற்கனவே புலிகளால் பறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களின் காணிகளில் தமிழ் மக்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர். இவ்வாறான சூழலில் முஸ்லிம்கள் அரச காணிகளில் குடியேறாமல் புலிகள் செய்தது போன்று தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்க முடியுமா?

எனவேதான் கூறுகிறோம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் ஆயரை தம்புள்ள தேரருடன் ஒப்பிட்டது சரி என்றும் மன்னார் ஆயர் தமது குற்றச்சாட்டை வாபஸ் பெறவேண்டுமென்றும் கூறிக்கொள்கிறோம்.

5 comments:

  1. உலமா கட்சி தலைவரின் பேச்சில் உண்மை இருக்கிறது .உலகம் முழுவதும் தமிழ் வளர்ப்பது முஸ்லீம்கள் தான்.என்று உவமான உவமயங்களுடன் நல்ல விளக்கம் தந்திகிறார்.ஆயர் பாவம் இதோடு மன்னித்து விட்டு விடுவோம்
    Meeraan .

    ReplyDelete
  2. Well said.

    ReplyDelete
  3. ஆயர் புலிக்கு வால் பிடித்தது போய் இப்போ சிங்கத்தின் வாலைப்பிடித்து காலத்தை ஓட்ட நிநைக்கிரார் போல
    யாழ் குருவி

    ReplyDelete
  4. மெலளவி முபாரக் அவர்களின் அறிக்கை காலத்தின் தேவைக்குரியது.ஏனெனில் முஸ்லிம் சமூகத்தினை ஊருகாய் போன்று தொற்றுக் கொண்டு தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியான வினே,சிவசக்தி போன்றவர்கள் இனவாத அறிக்கை விடுவதும்,அவருக்கு ஏற்ற மூடியாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை செயற்படவது கத்தோலிக்க மக்கள் அதனை வன்மையாக கணடிக்கின்றனர் என்பதை புலப்படுத்தியுள்ளார்.

    புலிகளை வளர்த்து அதன் மூலம் தம்மை பிரபல்யப்படுத்திய மன்னார் ஆயர் போன்றவர்கள்.வன்னியில் இருக்கும் வரை தமிழ்-முஸ்லிம் உறவு ஒரு போதும் இருக்கமானதாக அமையாது என்பது புலப்படுகின்றது.

    எனவே அமைச்சர் றிசாத் மன்னார் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்,ஆயருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றதோ அவரது மதம் சார்ந்த விடயங்களில் மட்டும் நின்று கொள்ள வேண்டும்.....அமைச்சர் றிசாத் என்பவ் துரத்தப்பட்ட சமூகத்தின் பிரதி நிதி அவருக்கு முழுமையான அதிகாரம் இருக்கிறது என்பது யதார்த்தம்.

    -ஜக்கிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு -

    ReplyDelete
  5. முஸ்லிம் சமூகத்தில் இன்று முக்கிய இடத்தை கொண்டவராக அமைச்சர் றிசாத் இருக்கின்றார்.அவரின் தலைமையில் இன்று மக்கள் அணிதிரளுகின்றனர்.அதனை தாங்கிக் கொள்ள முடியாத மன்னார் ஆயர்.அவருக்கு தற்போது செல்வாக்கு சரிந்து வருகின்றத என்பதை உணர்ந்து கொண்டு தமது வேத விளையாட்டை ஆரம்பிக்கின்றார்.

    தயவு செய்து ஆயர் தமது வேலையை இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் இல்லாதவிடத்து,கொழும்பில் அமைந்துள்ள ஆயர்களின் கவனத்திற்கு கொண்டுவர நேரிடும்.

    அரச நிர்வாகத்தை செய்ய ஆயருக்கு என்ன தேவை இருக்கின்றது.அதற்கு தான் ஜனாதிபதி தலைமையில் அரசு இருக்கின்றது என்பதை எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.