இதயம் பேசுகிறது..!
நவமணி
மற்றொரு மேதினக் கொண்டாட்டம் இவ்வாரம் முடிவுற்றது. மேதினமும் தொழிலாளர்தினம் என்பதும் ஒரே கருத்துள்ளதாகும். இந்த இரு விடயங்களைப் பற்றி பேசும் போது இலங்கை மக்களுக்கு குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறக்கமுடியாத ஒரு பெயராக ஆர். பிரேமதாஸா திகழ்கிறார்.
ஐ.தே. கா.வின் மேதினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் போது அவரது பெறுமதி மிகு உயிர் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்டது. மக்களுக்கு முதன்மை இடமளித்து தமது பாதுகாப்பை இரண்டாவதாக கருதி அவர் மேதினக் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மக்கள் மத்தியில் இருந்தார். அவர்களது வியர்வையின் மணத்துடன் நாட்டின் நாலாபுறங்களிலும் இருந்து வந்த மக்களுடன் அவர் உரையாடினார்.
அவருக்கும் மக்களுக்குமிடையே இடைவெளி இருக்கவில்லை. வழமைபோன்று இளம் பச்சை நிற சட்டையும் வெள்ளை சாரமும் அணிந்து இரு பாதணிகளுடன் அவர் பாதையின் அருகே இருந்தார். கம்பீரத் தோற்றத்துடன் பட்டாசுகளின் ஒலிக்கு மத்தியில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்த வண்ணம் வந்து நேரத்திற்கு மேடையேறி பேசிவிட்டுச் செல்லும் பழக்கம் அவரிடம் இருக்கவில்லை.
ஐ.தே.காவின் மேதினக் கொண்டாட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்து அதற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த கட்சி தலைவரது பெயரை மறைத்து மேதினத்தை ஐ.தே.காவினால் கொண்டாட முடியுமா?
உண்மையிலே ஒவ்வொரு வருடமும் ஐ.தே.கா.வின் மேதினம் பிரேமதாஸா நினைவுக்கூட்டத்திற்கு நிகராகவே நடத்தப்பட வேண்டும். தமது கட்சிக்காகவும் உழைக்கும் மக்களுக்காகவும் வாழ்க்கையை தியாகம் செய்த அவருக்கு நன்றி கடன் செலுத்தும் நல்ல சந்தர்ப்பம் அதுவே தான்.
ஆனால் இன்று என்ன நடக்கின்றது? அவரை நினைவுபடுத்தும் நிகழ்வுக்கு கட்சியினர், கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளாது இருக்கக் கூடிய வகையில் மேதினம் ஏற்பாடு செய்யப்படுகிறது. நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டோருக் கெதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு இந்த பெருமகனாரை நினைவுபடுத்துவது எவ்வளவு துரோகம் ஆகும். பிரேமதாஸ போன்றொருவர் இந்த நாட்டின் ஜனாதிபதி ஆவதற்கு முன் சாதாரண குடும்பத்தைச்சேர்ந்து ஒருவருக்கு இந்த நாட்டின் முதல் ஆசனத்தில் அமருவதனை நினைத்துக் கூடபார்க்க முடியாதிருந்தது. அது உயர்குலத்தவருக்கே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. குல, வகுப்பு வேறுபாடுகள் இல்லாமல் எந்தவொரு பிள்ளைக்கும் அவ்வழி திறக்கப்பட்டுள்ளது என்ற சித்தாந்தம் எமது நாட்டுக் கிடைத்தமை அவர் அந்த வழியை திறந்து வைத்ததினாலாகும்.
எங்களுடைய சமூகத்திலே வறிய மனிதர்கள் தொடர்பாக அவரிடம் ஒரு கனவு இருந்தது, இலக்கு இருந்தது, மன உறுதி இருந்தது. அந்தப் பயணத்தில் தடை, சவால்களை எதிர்கொண்டு முன்செல்வதற்கு அவரால் முடிந்தது.
இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக அவர் கண்ட கனவுகளை நினைவுபடுத்தும் போது எனக்கு நினைவு வருவது அமெரிக்காவில் சுதந்திரம், சமத்துவம். மனித உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் (ஐ hயஎந ய னசநயஅ) 'எனக்கு ஒரு கனவு உண்டு' என்ற அந்த பிரபலமான கதையாகும். 1963 இல் வொஷிங்டனில், ஆப்ரகாம் லிங்கனின் நினைவுச்சிலைக்கு முன்னால் இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்ட சுதந்திரம், மற்றும் மனித உரிமைக்காக செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் ஆற்றிய உரையின் சில பகுதிகள் எனது நினைவிற்கு வருகின்றது.
'நான் கனவு காண்கின்றேன். ஜோர்ஜியாவின் அடிமைகளது பிள்ளைகள் சகோதரத்துவமே சையை சுற்றி ஒன்றாக இருந்து பேசுகின்ற நாளைக் காண்பதற்கு'
'நான் கனவு காண்கின்றேன். எனது சிறுபிள்ளைகள் நாலு பேர் தொடர்பான அவர்களது தோலின் நிறமன்றி அவர்களது நடத்தை மற்றும் தீர்மானங்களை எடுக்கும் சமூகத்தின் இருப்பு பற்றி'
'நான் கனவு காண்கின்றேன். அநீதி, அடக்குமுறை நாள் பாதிக்கப்பட்டுள்ள மிசிசிசிப்பி பிராந்தியம் சுதந்திரத்தினதும், நீதியினதும் ஜென்ம பூமியாகுவதே'
'நான் கனவு காண்கின்றேன். எமது சமூகத்தின் உயர்ந்த இடத்தை தாழ்மைப்படுத்துவதற்கும் தாழ்ந்த இடத்தை உயர்மைபடுத்துவற்கும், கடினமானவற்றை மென்மையடைச் செய்வதற்குமான தினத்தை எம்மால் அடைவதற்கான நாளை காண்பதற்கு'
உண்மையிலே மார்ட்டின் லூதர் கிங்கின் கனவும் ஆர். பிரேமதாஸாவின் கனவின் அடிப்படையும் சித்தார்ந்ததும் இரண்டன்றி ஒன்றேயாகும். தம்புள்ளை பள்ளிவாசலுக்குச் சென்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ 'எமது நாட்டில் காட்டுச் சட்டம் அமுலில் இருக்க முடியாது சட்டத்தின் ஆதிபத்தியமும் எல்லோருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.
சரியானவற்றை சரியானதாகவும், பிழையானவற்றை பிழையானதாகவும் சொல்வதற்கு சக்தி உண்டு' என்று ஊடகங்கள் ஊடாக சொல்லும் போது எனது நினைவுக்கு வந்தது ஆர். பிரேமதாஸாவே.
எல்லா சமய இனங்களுக்கும், நீதியை நிலைநாட்டுவதற்காக அவர் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் விவகாரம் தொடர்பான அமைச்சுக்களை ஏற்படுத்தி இந்த நாட்டின் வரலாற்றில் இணைத்தார். எனினும் இன்று அவை செல்லுபடியற்றவையாகும்.
நாட்டின் கௌரவத்தை உயர்வாக மதித்த அவர் எந்தவொரு வெளிநாட்டுச் சக்திக்கும் தலைகுனிந்து செல்லவில்லை. சக்தியையன்றி நீதியையே நேர்மையாக கருதியவர். பலஸ்தீனத்துக்கு நீதியை நிலைநிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையின் போது அமெரிக்காவின் செல்வாக்குக்கு தலைகுனியாது உண்மைக்காக அவர் நேர்மையாக குரல் கொடுத்தார்.
இஸ்ரேலின் விரிவாக்க இனவாதிகளது ஏகாதிபத்திய கொள்கை உலக மக்கள் கருத்தை துpட்டுக்கும் மதிக்காதிருந்த பின்னணியில் அவர் இலங்கையில் இருந்த இஸ்ரேல் தூதுவரலாயத்தை மூடிவிடுவதற்கு தீர்மானித்தார், மேற்கு சக்திகள் மற்றும் இஸ்ரேலினால் வழங்கப்படும் நன்மைகளைக்கூட கவனத்தில் கொள்ளாது செயற்பட்டார்.
இஸ்ரேல், உலக மக்களது கருத்துக்கு தலை வணங்கும், வரை இஸ்ரேலுடன் தொடர்புகள் தேவையில்லை என்று அவர் துணிச்சலுடன் குறிப்பிட்டார். பலஸ்தீன், இலங்கையின் நட்புறவின் வெறும் வார்த்தைப் பிரயோகங்களுக்கு மட்டும் இடமளிக்கவில்லை. இன்று இஸ்ரேல், பலஸ்தீனுக்குள் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளுக்கு மத்தியில் ராஜதந்திரத் தொடர்புகள் மற்றுமன்றி இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் உயர் தரப்பு மட்டங்களின் இஸ்ரேல் விஜயங்கள் இதற்கு முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அங்கீகாரம், எமது நாட்டில் இருந்து கிடைப்பது கவலையளிக்கிறது.
இலங்கை மக்களின் சகல இனத்தவர்களதும் கௌவரவத்தை மதித்து சர்வதேச அரங்கில் இலங்கையின் இறைமையையும் கௌரவத்தையும் பாதுகாத்து பெருமை மிகு இலங்கைத்தேசத்தவரது இருப்புக்காக அவர் அர்ப்பணத்துடன் வாழ்ந்தார். மனிதாபினம் மிகு ஜனாநாயக வாதியான ஆர். பிரேமதாஸாவின் பணிகளை நன்றியுடன், இலங்கை மக்கள் என்றும் நினைவு கூருவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (குமரன்)
என்னதான் முஸ்லிம்களுக்காக வக்காலத்து வாங்குவதாக வேசம் போட்டாலும் அவரின் அடி மனதில் இருந்தது 1990
ReplyDeleteஇல் தெரிந்ததுதானே .பயங்கரவாதிகளுடன் தேன்நிலவு கொண்டாடும் நேரத்தில் தானே கிழக்கு மாகாண படுகொலைகளும் ,வடக்கு வெளியேற்றமும் ,கொள்ளையும் நடந்தது .உலகத்திற்கு தெரியாமல் மறைத்ததுதானே
இலங்கை முஸ்லிம்களுக்கு அவர் செய்த பெரிய உதவி .இன்று கூட பலருக்கு தெரியாமல், அப்படி ஒரு சம்பவம்
நடந்ததா என்றுதானே கேட்கிறார்கள் .அவரை பயங்கரவாதிகள் தான்நினைவு கூறவேண்டும் .5 ஸ்டார் உல்லாச ஹோட்டலையும் காட்டி , பஜிரோ வாகனங்களையும் ,கை நிறையகாசையும் ,ஆயுதங்களையும் கொடுத்து உதவி செய்த
வள்ளல் மகனார் தானே .
Meeran