Header Ads



இந்திய அரசு முஸ்லிம்களை கவர ஹஜ் பயணத்தை அரசியலாக்கிவிட்டது - உயர் நீதிமன்றம்

ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியத்தை, 10 ஆண்டுகளுக்குள் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஹஜ் பயணம் செய்வது முஸ்லிம்களின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த வருடம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படும். இந்த ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக மத்திய அரசு மானிய உதவி அளித்து வருகிறது. அரசு ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் சேவைகளில் செல்பவர்களுக்கு இந்த உதவி கிடைக்காது.

இதற்கிடையில், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யுமாறு பல இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும்  மானியத்தை படிப்படியாக குறைத்து, 10 ஆண்டுகளுக்குள் அதனை முற்றிலும் ரத்து  செய்திட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சிறுபான்மை இனத்தவர்களை கவருவதற்காக ஹஜ் பயணத்தை மத்திய அரசு அரசியலாக்கிவிட்டது என்று கூறிய நீதிமன்றம், புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்குவது சரியானதல்ல என்றும் கூறி தீர்ப்பளித்துள்ளது.

No comments

Powered by Blogger.