தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் அராஜகமானது - மேதின் கூட்டத்தில் ரணில் தெரிவிப்பு
இந்த நாட்டில் அரசாங்கம் அராஜக ஆட்சியை நடத்துகிறது. தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிக்கு என்ன நடந்தது அது அராஜகம் எதிர்க்கட்சி கூட்டணியின் தேசிய மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
'தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தினுள் நாட்டில் காணப்படும் பிரச்சினைக்கு சரியான அரசியல் தீர்வு காண வேண்டும் என நானும் இரா.சம்பந்தனும் தீர்மானித்துள்ளோம். நாட்டில் ஜனநாயக ஆட்சியை உருவாக்கவே நாங்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளோம். வடக்கிலுள்ள மக்களும் தெற்கிலுள்ள மக்களுக்குமான உறவை இந்த மே தினம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை இவ்வளவு காலமும் அறியாதிருந்த தெற்கு சிங்கள மக்கள் இன்று அறிந்துள்ளனர்.
யுத்தத்தினால் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவதாக 2009ஆம் ஆண்டு அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால், அது இன்னும் இடம்பெறவில்லை. முகாம்களிலுள்ள மக்கள் நகர வாழ்க்கையினையே அனுபவித்து வருகின்றனர். இது தொடருமானால் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் வீதியில் இறக்குவோம் என அரசாங்கத்திடம் தெரிவிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் நாங்கள் மேதினத்தை செய்வதினால் புலிகயோடு சேர்ர்ந்துள்ளதாக அரசு செல்கிறது. நாங்கள் கேபியை உங்கள் மடியில் நீங்கள் தான் வைத்து இருக்கின்றீர்கள். முடியுமானால் கேபியோடு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை அசைக்க உங்களால் முடியுமா?
யாழ்ப்பாண மக்களின் எதிர்பார்ப்பும் தெற்கு மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றாகவே இருக்கின்றது. இனங்களுக்கிடையில் ஜக்கியத் தீர்வையை அவர்கள் எதிர்பார்கின்றார்கள். தமிழ் மக்களின் பிரச்சனையை அரசு தீர்த்தால் பாரிய தேசிய ஒருமைப்பாடு ஏற்பட்டு இந்த நாட்டின் பொருளாதாரம் வளச்சியடையும்.
இந்த நாட்டில் அரசாங்கம் அராஜக ஆட்சியை நடத்துகிறது. தம்புள்ளையில் முஸ்லிம் பள்ளிக்கு என்ன நடந்தது அது அராஜகம் தானே?
பௌத்த புனித பூமியில் மாற்று சமயஸ்தலம் காணப்படுவது குற்றம் என்றால் அதனை அகற்றுவதற்கு என்றொரு நடைமுறையுள்ளது. அதுதான் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நீதிமன்றம் செல்வதாகும்.
ஆனால், தம்புள்ளையில் என்ன நடந்தது. புனித பூமியிலுள்ள பள்ளிவாசல் பலாத்காரமாக அகற்றப்பட்டது. குறித்த பள்ளிவாசல் சட்டவிரோதமென்றால் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அகற்றியிருக்கலாம். ஆனால், அவ்வாறு மேற்கொள்ளப்பட்டவில்லை.
குறித்த பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது, பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அப்பிரதேச அமைச்சர் ஒருவர், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். எனினும் அமைச்சரின் உத்தரவையும் மீறி பாதுகாப்பு தரப்பினருக்கு முன்னிலையிலேயே பள்ளிவாசல் தாக்கப்பட்டது.
வெள்ளை வானின் செயற்பாடு இன்று நாட்டில் அதிகரித்துள்ளது. வெள்ளை வானில் வருகிறார்கள், கொண்டு செல்கின்றனர், மறு உலகிற்கு அனுப்புகின்றனர். குறித்த வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களில்; சிலரே விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை கேட்பதற்கு இன்று நாட்டில் யாருமில்லை.
பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. மே தினத்திற்கு முதல் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை எதன் விலை அதிகரிக்கப்படும் என்பது கேள்விக்குறியாவுள்ளது.
கொழும்பிலுள்ளவர்களினாலேயே இந்த விலையேற்றத்திற்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் அகதி முகாம்களிலுள்ள மக்களினால் எப்படி முகம்கொடுக்க முடியும்?
இதனால் அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அரசாங்கத்திற்கு எதிராக பேசுபவர்கள் பழிவாங்கப்படுகின்றனர். தனது நாட்டு மக்களை தாக்கும் ஒரே அரசாங்கம் இந்த மஹிந்த அரசாங்கமேயாகும். இவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து போராடும்" என்றார்.
Post a Comment