Header Ads



தம்புள்ள பள்ளிவாசல் - முஸ்லிம்களுக்கு திருப்த்தியான தீர்வு கிட்டும் - அ.இ.ஜ.உ.ச

தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் மிகவரைவில் முஸ்லிம் சமூகுத்திற்கு திருப்த்திகரமான முடிவு கிடைக்குமென தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

தம்புள்ள பள்ளிவாசல் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. இதன் முக்கிய கட்டமாக அரசாங்க உயர் மட்டங்களை சந்தித்து முஸ்லிம்களின் உணர்வுகளையும், மனோ நிலையையும் விரிவாக எடுத்துரைத்துவருகிறது.

அந்தவகையில் இதுவிடத்தில் மிகவிரைவில் முஸ்லிம் சமூகுத்திற்கு திருப்த்திகரமான முடிவு கிட்டுமென உறுதியாக நம்புகிறோம்

எனவே இதுவிடயமாக உலமா சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சகலரும் ஒத:தழைப்பு வழங்குமாறும், பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் சகல முஸ்லிம்களையும் உலமாசபை தேவண்டிக்கொள்கிறது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.