Header Ads



மனித உடல் உறுப்புகள் ஆய்வகத்தில் வளர்ப்பு - இங்கிலாந்து விஞ்ஞானிகள் அசத்தல்

மனிதர்களின் உடல் உறுப்புகள் பழுதானாலோ விபத்துகளில் இழந்தாலோ மற்றொருவரிடம் இருந்து தானம் பெற்று ஆபரேசன் மூலம் மீண்டும் பொருத்தப்பட்டு வருகிறது.

ஆனால் தேவைப்படும் உடல் உறுப்புகளை ஆய்வகத்தில் வளர்த்து தேவைப்படுபவருக்கு பொருத்த முடியும். அதற்கான தொழில்நுட்பத்தை லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் அலெக்சாண்டர் சயிபாலியன் தலைமையிலான குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

உடல் உறுப்பு பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள செல்களை எடுத்து அவற்றை ஆய்வகத்தில் வளர செய்துள்ளனர்.  

உதாரணமாக ஒருவருக்கு மூக்கு தேவைப்படுகிறது என்று வைத்து கொள்வோம். அதற்குரிய செல்லை அவரது உடலில் இருந்து எடுத்து ஆய்வகத்தில் பலூனில் வைத்து வளர செய்கின்றனர். பின்னர் அந்த பலூனை மூக்கு பகுதியில் பொருத்துகின்றனர். அதற்குள் இருக்கும் செல்களில் தோல் மற்றும் ரத்த நாளங்கள் 4 வாரங்களில் வளர்ந்து மூக்கு ஆக உருவாகிறது. இது போன்று மற்ற உறுப்புகளையும் வளர செய்ய முடியும் என பேராசிரியர் அலெக்சாண்டர் சயிப்பாலியன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.