முஸ்லிம் சகோதராரின் காளை மாடு கோயிலுக்கு சொந்தமானது - பூரண கும்பம் வைத்து பூசை
யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு காளை மாடு விற்பனை சம்பந்தமான வழக்கு நேற்று நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து நிறைவடைந்தது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மன்னர் யாழ்ப்பாணம் கால்நடை அபிவிருத்தி தினைககளத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்ட நல்லின காளை மாட்டை ஏலத்தில் வாங்கிய நபரொருவர், குறிப்பிட்ட மாட்டை வெட்டுவதற்கு முடிவு செய்தார். அதற்கு முன்னர் மாட்டை காட்சிப்படுத்தியதுடன் அது தொடர்பில் அறிவித்தலையும் துண்டுப் பிரசுரம் மூலம் விளம்பரம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து குறித்த காளைமாட்டை வெட்டக்கூடாது என இந்து அமைப்புகள் யாழ். மாவட்ட அரச அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
காளை மாடு வெட்டப்படுவதைத் தடுக்குமாறு, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனையடுத்து குறித்த காளைமாட்டை வெட்டுவது தற்காலிகாமாக இடை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த மாடு யாழ்ப்பாணம் வணிகர் கழகம் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து காளை மாட்டை வாங்கியவருக்கு சுமார் இரண்டரை லட்சத்து ஐம்பதாயிரம் கொடுத்து வணிகர் கழகத்தினால் காளை மாடு பொறுப்பேற்க்கப்பட்டு நேற்று கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்க்கு கொண்டவரப்பட்ட காளை மாடு ஆலயத்தில் பூரண கும்பம் வைத்து வரவேற்கப்பட்டதுடன் பூசையும் இடம் பெற்று ஆலயக் குருக்கள் இராஜஸ்ரீ நகுலேஸவரக்குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் செயலாளர் ஜெனத்குமார் பொருளாளர் ஜெயராசா உப செயலாளர் சிவகுமார் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபிணி வரதலிங்கம் இந்து கலாச்சார அலுவலர் உதயபாலன் ஆகியயோரும் கலந்து கொண்டார்கள்.
Post a Comment