Header Ads



யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் தரிப்பில் புதிய விதிமுறை

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளின் நலன்கருதி போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்துத் தனியார் பஸ்களும் பெஸ்தியன் மாவத்தையிலிருந்து மட்டுமே தரித்து நின்று போக்குவரத்தில் ஈடுபட வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
 
 யாழ் - கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு 155 பஸ்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்

விலைமனுக்களின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பஸ்கள் தவிர்ந்த, 48 பஸ்கள் அனுமதிப் பத்திரங்கள் இன்றி போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன இதனால் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கிவருவதாகவும்  தற்போது பெஸ்தியன் மாவத்தை, வெள்ளவத்தை மற்றும் கெட்டாஞ்சேனை ஆகிய இடங்களில் மூன்று பஸ் தரிப்பிடங்கள் காணப்படுவதால் பயணிகளுக்கும் பஸ் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் எதிர் நோக்கி வருவதாகவும்.

பல்வேறு இடங்களில் ஆசனப் பதிவுகளின் போது முறைகேடுகள் இடம்பெறுவதனைக் கருத்திற்கொண்டே இவ் புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.