யாழ் சோனகத் தெருப்பகுதியில் அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் உதவிகள்
யாழ்ப்பாணம் அராலி வீதியிலுள்ள புதிய சோனகத் தெருப்பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள முஸ்லிம் மக்களின் வீடுகளில் உள்ள கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.
அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பினாலேயே முஸ்லிம் மக்களின் கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இதுவரை 50 கிணறுகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
சிமெந்துச் சுவர் நில மட்டத்தில் காணப்பட்ட கிணறுகளுக்கு நில மட்டத்திலிருந்து 3 அடி உயரத்துக்கு சிமெந்துச் சுவர் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கிணறுகளைப் புனரமைப்புச் செய்வதற்காக விண்ணப்பித்த முஸ்லிம் மக்களுக்கே முதல் கட்டமாக 50 கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.
புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள கிணறுகளை நேரில் பார்த்து நிலைமையை அறிவதற்காகக் கடந்த மே தினத்தன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவரும், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசீம் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தனர். இந்தக் குழுவினருடன் கொழும்பு மாநகரசபை முதல்வர் எம்.முஸம்மிலும் வருகை தந்திருந்தார்.

Post a Comment