லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு மூன்றாவது இலங்கையர் தெரிவு செய்யப்பட்டார்
இலங்கை தேசிய பட்மிண்டன் சம்பியனான நிலுக கருணாரத்ன லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பட்மிண்டன் சம்மேளனத் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
சர்வதேச பட்மிண்டன் பேரவையின் நிரல்படுத்தலில் நிலுக கருணாரத்ன 47 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஒலிம்பிக் தகுதிக்கான் நிரல்படுத்தலில் அவர் 29 ஆம் இடத்தில் உள்ளார்.
இதன் பிரகாரம் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற மூன்றாவது இலங்கையராக நிலுக கருணாரத்ன விளங்குகின்றார்.
Post a Comment