விஞ்ஞானத்திற்கு முகம்கொடுக்ககூடிய கல்வியே அவசியம் - பீர்முஹம்மத்
ஜே.எம்.ஹாபீஸ்
நாம் தினமும் விஞ்ஞான விடிவைச் சந்திக்கிறோம், அதற்கு முகம் கொடுக்கக் கூடிய கல்வியையே நாம் கற்றல் வேண்டு மென்று பிரபல பேச்சாளரும் இலக்கிய ஆர்வலருமான எம்.எம். பீர்முஹம்மத் தெரிவித்தார்.
நாம் தினமும் விஞ்ஞான விடிவைச் சந்திக்கிறோம், அதற்கு முகம் கொடுக்கக் கூடிய கல்வியையே நாம் கற்றல் வேண்டு மென்று பிரபல பேச்சாளரும் இலக்கிய ஆர்வலருமான எம்.எம். பீர்முஹம்மத் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட பாடசாலைகளிலிருந்து ஜந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டும் வைவத்தில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாராட்டுதல் மற்றும் பரிசு வழங்குதல் என்பது சாதாரண விடயங்கள் அல்ல.ஒருவரைப் பாராட்டும் போது அவர் குருதி வெப்படைகிறது. இதனால் உடல் சுறுப்பாகி நலம் பெறுகிறது. இதன் காரணமாக அவர் விரைவாக செயல்பட உவுகிறது.ஒரு பிரதேசம் மிகச் செழிப்பாக இருக்கவேண்டுமாயின் 5 விடயங்கள் இடம் பெறவேண்டும்.
முதலாவதாக அரசன் அல்லது அந்தச் சூழலுக்கு தலைமை தாங்குபவன் சரியாதை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அடுத்ததாக அரசு ஊழியர் அல்லது நிர்வாகிகள் முறையான இயங்க வேண்டும். புத்திஜீவிகளது ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். அப்பகுதி மக்கள் வள்ளல் தன்மை கொண்டவர்காளாக வாரி விங்க வேண்டும். ஐந்தாவது விடயமாக ஏழைகளின் தூய்மையான பிராத்தனை இருக்கவேண்டும். என்பது ஒரு பேரறிஞ்சரது கருத்ததாகும்.
அந்த அடிப்படையில் இந்த மணடபத்தை எடுத்துக் கொண்டால் இங்கு மாத்தளை மாநகர பிதா ஹில்மி கரீம் உற்படப் பல அரசியல் பிரமுகர்கள் இருக்கிறார்கள். அரச அதிகாரிகளான கல்வி அதிகாரிகள் பலர் இருக்கின்றனர். புத்தி ஜீவஜகள் பலர் ஒன்றிணைந்து ஒருவாக்கிய ஒரு அமைப்பு மூலம் இவ்வைபவத்தை ஒழுங்கு செய்துள்ளளீர்கள். இதற்கு கொடை வள்ளல்கள் பலர் நிதி உதவி செய்துள்ளீர்கள் மண்டபம் நிரம்பி வழிய ஏழைச் சீறார்களும் அவர்கள் பெற்றோர்களும் பரிசிற்காகக் காத்து நிற்கின்றீர்கள். பரிசு கிடைத்ததும் நன்றிப் பெறுமூச்சு விடுகின்றீர்கள்.
அப்படியாயின் மேலே சொன்ன அந்த ஐந்து அம்சங்களும் ஒருங்கே காணப்படுவதன் காரமாக அவ்வறிஞரின் கூற்றுப்படி இப் பகுதி செளிப்படையும் வாய்ப்பு உருவாகும்.ஒருவரைப் பாராட்டும் போது வஞ்சனை இன்றி மனதாரப் பாராட்ட வேண்டும். அதே நேரம் அனைத்து புண்ணியங்களிலும் மேலானது ஏழை மாணவர்களுக்கு உதவுவதாகும் என்று பாரதியார் ஒரு கவிதையில் அழகுறக் கூறியுள்ளார். எனவே மனமாற ஏழை மாணவர்களுக்கு உதவ முடியுமாயின் அது வாழ்கையில் மிக உயர்ந்த அம்சமாக மாறி விடும்.
மாணவர்களுக்கு தாய் மொழிக்கல்வி மிக முக்கிய மாகும். அதற்காகப் பிற மொழிகளைப் பயிலக் கூடாது என்பதல்ல. வாழ்க்கைக்கு அவையும் தேவை. ஆனால் அடிப்படைக் கல்வி தாய் மொழியில் வழங்கப் படவேண்டும். ஒரு குழந்தைக்கு உண்மையான தாயும் தத்தெடுத்த தாயும் சமனாக முடியாது. அதுபோல தாய் மொழியும் தத்தெடுத்த மொழியும் சமனாகாது.
தான் கற்ற கல்வியால் தானும் வளர்ந்து தனது சந்ததிக்கும் வளர வழி காட்டுபவனே உண்மையான கல்வி இயலாளன் ஆவான். பட்டம் பெற்றவர்களது கல்வியும் இதே விதம் அவர்களையும் வளர்த்து அவர் சகூகத்தையும் வளர்க்க உதவவேண்டும். அப்படியல்லாத பட்சத்தில் அது வெறும் 'பட்டாதாரிகள்' அல்லது 'பட்ட பின்பு' கல்வி டிப்லோமா ஆகிவிடும் என்று அறிஞர் அண்ணாவும் மற்றொரு பெரியாரும் கூறிய விடயம் எனக்கு நினைவிற்கு வருகிறது என்றார்.
இவ்வைபவத்தில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்ட மாத்தலை நகர முதல்வர் ஹில்மி கரீம் தெரிவித்ததாவது,
நூம் சிறுவர்களாக இருந்த காலத்தில் சுமார் 50,60 வருடங்களுக்கு முன்பு பல் இன மக்கள் ஒரே பாடசாலையில் கல்வி கற்றோம். பல்லின ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர். இதன்காரணமாக அன்று ஒரு சமூக ஒற்றுமையைக் காண முடிந்தது. இன்று அப்படியல்லாது இன, மொழி, சமய, பேதங்களின் அடிப்படையில் கூறுபோடப்படுகிறது. இது துர் அதிஷ்ட நிலைமையாகும். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்நிலையை மாற்றி பழைய நிலைமைக்குக் கொண்டு வர படிப்படியாக முயற்சி செய்து வருவதன் காரணமாக வெகு விரைவில் எம்மில் சிறந்த எதிர்காலம் மலரும் என்றார்.
இங்கு மாணவர்களது பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.தமிழ், சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளைச் சேர்ந்த மூவின மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
Post a Comment