யாழ்ப்பாணத்தில் பேரிச்சம் பழம்...!
யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் பேரீச்சம் மரங்கள் காணப்படுவதை நாம் அவதானித்துள்ளோம். இருந்தபோதும் முதன்முறையாக பேரீச்சம்பழ மரமொன்று காய்த்து, பழுத்த நிலையில் காணப்படுவதாக அறியவருகிறது.
ஏ9 வீதியிலுள்ள நாவற்குழி, உப்பாற்று பாலத்திற்கு அண்மையில் இவ்வாறு பேரீச்சம் பழ மரமொன்று காணப்படுவதாகவும், அதில் பேரீச்சம் பழங்கள் காய்த்து குலுங்குவதாகவும், அப்பகுதியால் செல்பவர்கள் அவற்றை சுவைத்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் ஏற்கனவே காத்தான்குடி, புத்தளம் போன்ற பிரதேசங்களில் பேரிச்சம் மரங்கள் காணப்படுவதும், அவற்றிலிருந்து பேரிச்சம் பழங்கள் கிடைத்துவரும் நிலையில் தற்போது யாழ்ப்பாணத்திலும் பேரிச்சம்பழம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விவசாய ஆராயச்சியாளர்கள் தமது கவனத்தை திருப்புமிடத்து யாழ்ப்பாணத்தில் இருந்தும் பேரிச்சம் பழங்களை பெற்றுக்கொள்ள முடியுமென்பதும், அதன் மூலம் பயனடையலாமென்பதும் யாழ் முஸ்லிம் இணையத்தின் எதிர்பார்ப்பாகும்.
இனிமேல் சவுதிக்கு போகத்தேவையில்லை .சில வேளைகளில் கிணறு தோண்டும் போது எண்ணைவந்துவிடப்போகிறது .அமெரிக்ககாரன் நமது நாட்டின் மீது உரிமையோடு குண்டு போட்டு நாட்டை ஆக்கிரமிக்கப்போகிறான் .பேரித்தமரம் முளைத்தால் பேசாமல் சாப்பிட்டுவிட்டு இருக்கவேண்டியதுதானே .தமிழ் ஈழம் இனிமேல் english ஈழமாக மாறிவிடப்போகிறது இந்திய சினிமா ,அரசியல் கோமாளிகளே உங்களுக்கு போராடவிடயம் கிடைத்துவிட்டது .வாழ்க dollar ,euro வியாபாரங்கள் .,
ReplyDeleteMeeraan