Header Ads



ஒஸாமா பின்லேடனின் இரகசிய ஆவணங்களை பகிரங்கப்படுத்தியது அமெரிக்கா

அமெரிக்கப் படையால் கொல் லப்பட்ட ஒசாமா பின்லேடனின் அபோதாபாத் வீட்டில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களில் ஒரு சிலதை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது. இதில் பின்லேடன் தனது கடைசி காலங்களில் தமது அமைப்பின் வலை பின்னலை கட் டுப்படுத்துவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

அபோதாபாத்தில் அமெரிக்க இராணுவம் நடத்திய இராணுவ நடவடிக்கையின்போது கைப்பற் றப்பட்ட இந்த ஆவணங்கள் அமெரிக்க இராணுவ அகடமியின் ஆய்வுப் பிரிவின் ஊடாக நேற்று முன்தினம் இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதில் முஸ்லிம்கள் மீது எதிரிகளின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு அதிருப்தி அடைந்துள்ள ஒசாமா பின்லேடன் அமெரிக்க இலக்குகள் மீது பதில் தாக்குதல் நடத்த ஒசாமா வலியு றுத்தியுள்ளார். இதன்போது அமெரிக்க இராணுவத்தால் 175 பக்கங்கள் கொண்ட 17 ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டு ஓர் ஆண்டு பூர்த்தியாகும் வாரத்தில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையான காலப் பகுதியில் பதியப்பட்ட ஆவணங்களே இவ்வாறு வெளியி டப்பட்டுள்ளன. இதில் ஒசாமா பின்லேடனுக்கு அந்த அமைப்பின் வேறு தலைவர்கள் எழுதிய கடிதங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் மூலம் ஈரானுடன் அல் கொய்தா அமைப்பு இறுக்கமான உறவையே கொண்டிருந்தது என்பது தெரியவந்துள்ளது.

இதில் ஈரான் அரசு, கைது செய் யப்பட்டுள்ள அல்கொய்தா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பின்லேடனின் உறவினர்களை விடுவிப்பது தொடர்பில் பின்லேடன் அதிருப்தியை வெளிப்படு த்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த ஆவணத்தில் “அவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தைகளுக்கு வருவார்கள் என்றோ அல்லது எமது அழுத்தங்களுக்கு பதில் அளிப்பார்கள் என்றோர் எதிர்பார்க்க வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

எனினும் பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கு அந்நாட்டு நிர்வாக மட்டத்தில் எந்த ஆதரவும் வழங்கப்பட்டதற்கு ஆவணங்களில் ஆதாரங்கள் காணப்படவில்லை. அந்த ஆவணங்களில் “பாகிஸ்தான் சகோதரர்களை நம்புங்கள்” என கூறப்பட்டுள்ளது. எனினும் பாகிஸ்தான் உளவுப் பிரிவு குறித்து பின்லேடன் கவலை அடைந்திருந்தார் என்பது இந்த ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பின்லேடன் பாகிஸ்தானில் 9 ஆண்டுகள் அளவு வாழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவிர, தமது குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வருவதற்கும் வழிகாட்டி இருப்பது ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில் தெரியவந்துள்ளது. இதில் அவர் தமது குடும்பத்தினரை எவரும் கண்காணிக்கமாட்டார்கள் என்பதை உறுதியளித்துள்ளார். அத்துடன் தாம் இருக்கும் வீட்டில் தமது குடும்பத்தினர் மீது பாக். உளவுப் பிரிவினர் விசாரணை நடத்தியதும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கும்படி தமது அமைப்பினருக்கு பின்லேடன் வலியுறுத்தியிருப்பது ஒரு சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தாக்குதல் நடத்தி னால் ஏனைய எதிரிகள் தானாக அழிந்துவிடுவதாக பின்லேடன் கூறியுள்ளார்.

“பிரிட்டனை தாக்க எமக்கு வாய்ப்பு இருக்கிறது. எனினும் நாம் அதனைச் செய்து எமது முயற்சியை வீணாக்கத் தேவையில்லை. அமெரிக்காவை வீழ்த்துவதில் முழு கவனத்தையும் செலுத்துவோம். அதனை செய்தால் ஏனையோர் தானாக வீழ்த்தப்படுவார்கள்” என ஒரு கடிதத்தில் ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.

இதில் ஓர் ஆவணத்தில் முஸ்லிம்களிடம் இருந்து ஜிஹாத் சித்தாந்தம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதற்கு ஒசாமா பின்லேடன் தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஓசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில் “எமது தவறுகளை நிறுத்தி புதிய வடிவில் உருவாக வேண்டும்” என கூறியுள்ளார்.

“ஜிஹாத் மீது நம்பிக்கை இழந்தவர்கள் மீது நம்பிக்கை அளிக்கும் மிகப் பெரிய திட்டத்தை நாம் செயற்படுத்த வேண்டும்” என ஒசாமா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதன்படி ஒசாமா பின்லேடனின் ஆவணங்களின் சுருக்கத்தை அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது. அதில் அவர் தமது அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அமைப்பின் வலையமைப்பை கட்டுப்படுத்த முடியாதது குறித்து கவலையடைந்துள்ளார்.

* ஈராக்கில் ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து தமது ஈராக் வலையமைப்பை துண்டிக்குமாறு அல்கொய்தா தலைவர் கலிபோர்னியாவில் பிறந்த தனது ஊடக ஆலோசகருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

* பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் மற்றும் அவர்களது ‘வெறுக்கத்தக்க தவறுகள்’ குறித்து கவலை வெளியிட்டுள்ள ஒசாமா பின்லேடன் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

* அல்கொய்தாவின் அரேபிய பிராந்தியத்திற்கு தமது கடுமையான வார்த்தை பிரயோகத்துடன் ஒசாமா பின்லேடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் யெமன் அரசுக்கு அல்லது அந்நாட்டு இராணுவத்திற்கு தாக்குதல் நடத்துவதை விட்டுவிட்டு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த அழுத்தம் கொடுத்துள்ளார்.

* அல் கொய்தா ஆதரவான சோமாலியாவின் அல் ஷபாப் ஆயுதக் குழுவின் நம்பிக்கைக்கான உத்தரவாதத்தை பெற பின்லேடன் முயற்சித்துள்ளார்.

இந்த ஆவணத்தில் உள்நாட்டு ஜிஹாத் செயற்பாடுகளில் பின்லேடன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதில் தற்கொலை தாக்குதலுக்கு ஒருவரை அனுப்புவதை நிறுத்தி குறைந்தது இருவரையாவது அனுப்புமாறும் அவர் தமது அமைப்பினருக்கு கூறியுள்ளார். இவ்வாறான தாக்குதலுக்கு ஒருவரை அனுப்புவதால் அதன் விளைவுகள் குறைவாகவே இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒசாமா பின்லேடன் எழுதிய மற்றுமொரு கடிதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அல்லது டேவிட் பெட்ரிஸ் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்குமாறும் தமது அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார். டேவிட் பெட்ரிஸ் தப்போது அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. யின் இயக்குனராக உள்ளார். முன்னதாக அவர் ஆப்கானிஸ்தானுக்கான சர்வதேச படையின் கட்டளை தளபதியாக இருந்தார்.

எனினும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பைடன் மீது தாக்குதல் தொடுக்க வேண்டாம் என ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.
“பைடன் ஜனாதிபதிப் பதவிக்கு தகுதியானவர் அல்ல. அவர் அமெரிக்காவுக்கு தலைமை வகித்தால் அது சிக்கலை எதிர்நோக்கும்” என பின்லேடன் கூறியுள்ளார்.

கடந்த 2011 ஏப்ரலில் ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதத்தில் அரபு எழுச்சி குறித்து எழுதியுள்ளார். இந்த எழுச்சியை இஸ்லாமிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. ஒசாமா சொல்லித்தான் எங்களுக்கு ஜிஹாத் வரவேண்டும் இல்லை அமெரிக்காவோ ஜிஹாத் எங்கள் இரத்தில் ஊறியது

    ReplyDelete

Powered by Blogger.