யாழ்ப்பாணத்தில் காத்திருந்த முஸ்லிம்களை ஏமாற்றிய ரணில் விக்கிரமசிங்க..!
மேதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த சில நாட்களில் மதவழிபாட்டு தலங்களுக்கு சென்று, மதப் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். இவ்வாறே யாழ்ப்பாணத்திலுள்ள புதுப்பள்ளிக்கும் ரணில் விக்கிரமசிங்க செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அக்கட்சியின் ஊடகப் பிரிவும் உறுதிசெய்திருந்தது.
இந்நிலையில் யாழ் புதுப்பள்ளியில் முஸ்லிம் சமூக, சமய அரசியல் பிரமுகர்கள் ரணிலின் வருகைக்காக கத்திருந்துள்ளனர். திட்டமிட்டபடியே ரணிலும் அங்கு சென்றுள்ளார்.
அவ்விடத்துக்கு சென்ற ரணில், வாகனத்தில் இருந்துகொண்டே, எல்லோருக்கும் கையசைத்து வணக்கம் தெரிவித்துள்ளார். நாளை (மே 1 ஆம் திகதி, செவ்வாய்கிழமை) கூட்டத்துக்கு வாருங்கள் என்று சிங்களத்தில் கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.
யாழ்ப்பாணத்தில் ரணில் விக்கிரமசிங்க ஏனைய மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று, அங்குள்ள பிரமுகர்களையும் சந்தித்திருந்த நிலையில் ஏன் யாழ்ப்பாண முஸ்லிம்களை சந்திக்கவில்லையெனவும், ஏன் வாக்குறுதி வழங்கியவாறு புதுப்பள்ளிக்கு செல்லவில்லையெனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யாழ் புதுப்பள்ளியில் காத்திருந்த முஸ்லிம்களை ரணில் விக்கிரமசிங்க காத்திருக்கச் செய்து, திட்டமிட்டு அவமானப்படுத்திவிட்டாரெனவும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு தேசத்துரோகியான தன்னினச் சேர்க்கையாளன் வரவில்லை என்பதால்
ReplyDeleteபுதுப்பள்ளிக்கு நல்லதே. இதில் கவலைப் பட ஒன்றுமில்லை.
இங்கே யூ என் பி யின் உண்மை முகம் தெரிகின்றது. அவர்களுக்கு
முஸ்லீம்களைப் பற்றி அக்கறை இல்லை, கூட்டத்துக்கு ஆள் வந்தால் போதும், அவ்வளவுதான்.
முஸ்லீம்கள் யூ என் பீ,- யூ என் பீ என உயிரை விடுவதால் எந்தப் பயனும் இல்லை.
காத்தான்குடி படுகொலைகள், வடக்கின் இனச் சுத்தீகரிப்பு என முஸ்லீம்களுக்கு எதிரான
பாரிய இழப்புக்களைத் தந்த திட்டமிட்ட அனைத்து நடவடிக்கைகளும் யூ என் பீ ஆட்ச்சியில் இருந்த பொழுதே
நடைபெற்றன.
வடக்கு அகதிகளினதும், கிழக்கு முஸ்லீம்களினதும் வாழ்க்கையில் மாறுதல்களும், முன்னேற்றங்களும்
நடைபெற ஆரம்பித்ததே 1994 ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர்தான். இரண்டாண்டுகளிலேயே புலிகளின் பிடியில் இருந்து யாழ்ப்பாணம்
மீட்கப் பட்டது. மீண்டும் ஆட்ச்சிக்கு வந்த ரணிலின் அரசாங்கத்தின் காலத்தில் தான் புலிகளுக்கு மேடையில் வைத்து பெயர்தாங்கி யாழப்பாண
முஸ்லீம்கள் சர்பத்து கொடுத்த கேவலம் நடைபெற்றது. வேண்டாமே இந்த ரணில் நமக்கு.
பள்ளிவாசலுக்கு இவர்களை ஏன்அழைக்க வேண்டும் .எதுவாக இருந்தாலும் பள்ளிக்கு வெளியில் வைத்துக்கொள்ளவும் .நமது பள்ளிகளும் புனிதமானவை என்று ஏற்பாடு செய்தவர்களுக்கு தெரியாதா?பள்ளிவாசல்கள் தொழுவதற்கும்,மார்க்கசம்பந்தமான விடயங்களுக்கும் மட்டும் பாவிப்பதற்கு வைத்துக்கொள்ளவும் .இதில் சமூக சிந்தனையைவிட சுயநலம்தான் முக்கியமாக தெரிகிறது .பள்ளிவாசல்களை அரசியலுக்கு பாவிக்க வேண்டாம்.ரணில் வராததால் பள்ளியின் புனிதம் பாதுகாக்கப்பட்டுள்ளது .
ReplyDeleteMeeran
1987ம் ஆண்டு சிங்களப்படைகளின் விமானகுண்டுகளுக்கு பயந்து முஸ்லீம் மக்களின் பள்ளிவாசலுக்கு சென்றால் பாதுகாப்பு என கருதி சென்ற வயோதிப இந்திய TAMIL தாயை TAMIL பண்டிகளுக்கு இங்கு இடமில்லை என கூறியவர்கள் அல்லவா நீங்கள் இப்ப ஏன் கவலைப்படுகிறீர்கள் ஒரு வேலை இது ரனிலுக்கும் தெரியுமோ
ReplyDeleteயா திரு வரண் (varan) அவர்களே, நீங்கள் சொல்வது போன்ற ஒரு செய்தியை இப்பொழுதுதான் முதல் முறையாக கேள்விப் படுகின்றேன்.
ReplyDeleteஉண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், மிக்க வருந்துகின்றேன்.
1987ம் ஆண்டு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள், தகவல் போதுமானதாக இல்லை. எந்த பள்ளிவாசலில் நடைபெற்றது என்பதனை தெரிவித்தால் நன்றாக இருக்கும். இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால், TAMIL பண்டி என்று சொல்லியிருந்தால் அது மாபெரும் தவறே, உரியவர்கள், பள்ளி நிர்வாக சபைகள் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப் படுகின்றன.
முஸ்லிமல்லாதவர்கள் பள்ளிவாசலுக்குள் செல்வதில் இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை.
அனால் பள்ளிவாசல்கள் அரசியல் மயப்படுத்தப் படுவதை மட்டும் அனுமதிக்க முடியாது.
இன்றும் கூட முஸ்லீம்களில் பலருக்கு இஸ்லாம் மார்க்கம் ஒழுங்காக தெரியாது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அதிலும் 25 வருடங்களுக்கு முன்னர் சரியான இஸ்லாம் பற்றிய அறிவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இஸ்லாமிய மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத மக்கள் எப்படி கத்தம் (அந்தியோட்டி கிரியை) மீலாத் விழா (நபி பிறந்த தினம்?),
தர்கா (சமாதி) வழிபாடு, கந்தூரி, ராத்திப் போன்றவற்றை மார்க்கம் என்று அறியாமையின் காரணமாக நம்பினார்களோ, அதே போலவே முஸ்லிம் அல்லாதவர்களும், முஸ்லீம் பெண்களும் கூட பள்ளிவாசலுக்குள் நுழையக் கூடாது என்று நம்பினார்கள்.
இது தவறான நம்பிக்கையே தவிர இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ள விடயங்கள் அல்ல.
ஒஸ்மாணியா பாடசாலைக்கு அருகிலுல்ல பள்ளிவாசல்தான் அது ஆனால் நாம் அப்படி பிரிவு காட்டி நடப்பது இல்லை அவ்வயதன முதியவர் இந்தியரானுவத்தின் செல்லடியில் இறந்துவிட்டார்
ReplyDeleteஆழ்ந்த வருத்தங்கள். கவலையான நிகழ்வு.
ReplyDeleteமுஸ்லீம்களில் சிலர் இவாறு நடந்து கொண்டது குறித்து வெட்கப் படுகின்றேன்.
எனினும் அவாறு யார் செயல்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
சாதாரண தமிழர்கள் முஸ்லீம்களை நன்றாகவே நடாத்தினார்கள் என்பதை நாம் தெளிவாகவே
அறிவோம். 1987 காலப்பகுதியில் IPKF தாக்குதல் காலத்தில் இடம் பெயர்ந்த பல முஸ்லீம் குடும்பங்கள்
நல்லூர் கந்தசுவாமி கோயில் உட்பட மேலும் சில கோயில்களில் தமிழர்களுடன் சேர்ந்து அகதிகளாக
தங்கியிருந்தமையை மறக்கவோ, மறைக்கவோ முடியாது. தமிழர் முஸ்லிம்கள் உறவைப் பாதித்தது
புலிகளின் விவேகமற்ற கொடூர செயல்பாடேயாகும்.
நீங்கள் குறிப்பிடுவத பார்த்தால், அந்த இடம் சின்னப் பள்ளிவாசலாக இருக்க வேண்டும்.
தற்பொழுது யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி வந்துள்ள கிராம சேவகர் ஜனாப் ஜிநூஸ் அவர்கள்
குறித்த பள்ளிவாசளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாக இங்கே ஒரு பேட்டியில் உரிமை
கோரியிருக்கின்றார். ஆகவே இந்நிகழ்வு குறித்து ஆராய்ந்து அது குறித்து மன்னிப்பு கேட்க பழைய நிர்வாக
சபை தொடர்பாக அறிந்த ஜனாப் ஜிநூஸ் அவர்களே நடவடிக்கை எடுக்கப் பொருத்தமானவராக தென்படுகின்றார்.
ஜனாப் ஜிநூஸ் அவர்களே, இது உங்கள் கவனத்திற்கு.......