Header Ads



இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் வேண்டாம் - அமைச்சர் றிசாத் ஜனாதிபதிக்கு கடிதம்


இர்ஷாத் றஹ்மத்துல்லா

இலங்கையில் -.இஸ்ரேல்  அலுவலகம் அமைக்கப்படுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது எதிர்ப்பை தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கடிதம் ஒன்றினை கையளித்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கையொப்பமிட்டு இக்கடிதத்தை  புதன்கிழமை (2012.05.09) ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.எஸ்.ஹமீட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இஸ்ரேலின் அலுவலகம் அமைக்கப்படுவுது தொடர்பாக தற்போது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன சஞ்லமான நிலைக் குறித்து தங்களது கவனத்திற்கு கொண்டுவருவது அவசியம் என கருதுகின்றேன்.

இலங்கையில் இஸ்ரேல் தூதரகம் அமைக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் பண்டாரநாயக்க ஆட்சி இருந்து வந்தது.அதன்; பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன,கட்சியின் அப்போதைய தவிசாளராக இருந்த டாக்டர் எம்.சீ.எம் கலீல் அவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது,இஸ்ரேல் அலுவலகம் இலங்கையில் அமைய அனுமதி வழங்கினார்.அதனை தொடர்ந்து முன்னால் ஜனாதிபதி ஆர் பிரேமதாச இவற்றை அகற்றினார் என்பது வரலாறு.

இலங்கை – பலஸ்தீன நட்புறவு சங்கத்தின் தலைவராக நின்று,அந்த நாட்டு மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த சிரேஷ்ட தலைவர்களின் பட்டியலில தாங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதை பெறுமையுடன் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.

எனவே இவ்வாறான முக்கியத்துமிக்க காலத்தில் இலங்கையில் இஸ்ரேலிய ஊடுவலை எமது மக்கள் விரும்பவில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இங்கு இஸ்ரேல் அலுவலகம் அமைவதற்கு தமது எதிர்ப்பை இதன் மூலம் தெரிவித்து கொள்கின்றது என்றும் அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.