Header Ads



யாழ்ப்பாணத்தில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் கிளை திறந்துவைப்பு

சிறீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் யாழ்.மாவட்டத்திற்கான புதிய கிளையினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.  ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையப் பெற்றுள்ள இப்புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது.

சிறீலங்கன் எயார் லைன்ஸ்சின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமயத் தலைவர்களின் ஆசியுரைகளை அடுத்து பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாழ்த்துரையாற்றும் போது 30 வருடங்களுக்கு பிறகு இம் மாவட்டத்தில் மீண்டும் விமானசேவை ஏற்பாடுகள் செய்ய முன்வந்ததையிட்டு துறைசார்ந்த அனைவருக்கும் மக்களின சார்பில் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இதன் சேவை சிறக்க வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெயசீலன் உரையாற்றும் போது ஒரு காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வடமாகாணத்தின் பங்கு முக்கியமானது என்றும், எனவே மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வடமாகாணத்தின் பங்கு முக்கியமாகத் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
 
இந்நிறுவனத்தினூடாக இலங்கையிலிருந்து 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான பயணச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




 

No comments

Powered by Blogger.