Header Ads



இஸ்ரேலின் கொள்கைகள் சமாதானத்திற்கு ஆபத்தானவை - ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது

மேற்குகரையில் இஸ்ரேல் நிர்மாணித்து வரும் குடியேற்றங்கள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் கொள்கைகள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவாகர அமைச்சர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிழக்கு ஜேருசலேம் பகுதியின் கட்டுப்பாட்டை இறுக்கமாக்குவதுடன், குடியேற்றத் திட்டங்களையும் இஸ்ரேல் துரிதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இதுபோன்ற கருத்துக்கள் உதவி புரியாது எனவும் கூறியுள்ளது.
 

1 comment:

  1. வெள்ளைக்காரனுக்கு தெரிந்தது, நமது ஜனாதிபதிக்கு தெரியவில்லை .உலகம் அழியும்வரை சபிக்கப்பட்ட
    இனம் இருக்கிறதென்றால் அது யூத சமுதாயம் தான் .ஆனாலும் வெள்ளைக்காரன் அரபிகளை ஏமாற்றி
    ஆயுத வியாபாரதிக்காக சொன்ன வார்த்தையாகவும் இருக்கலாம் .
    Meeraan

    ReplyDelete

Powered by Blogger.