காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க தலைவர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது - இம்ரான்கான்
இந்தியா பொருளாதார மாநாடு நடந்தது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லை பிரச்சினைகளை பேசி தீர்க்க இரு நாடுகளிலும் பலம் வாய்ந்த சிறந்த தலைவர்கள் தேவை. ஆனால் இந்த நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய உண்மையான தலைவர்கள் இல்லை என கருதுகிறேன்.
எனவே நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண தீவிர முயற்சி மேற்கொள்வேன்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியும், சமாதானமும், நல்லுறவும் ஏற்படும். வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment