Header Ads



கண்ணியமிக்க உலமா சபையை உடைத்துவிட்டதாக கூறி பொய் பிரச்சாரம் - யூசுப் முப்தி

முஸ்லிம் விவகாரத்தை வைத்துக்கொண்டு எந்தவொரு முஸ்லிம் அரசியல் வாதியும் அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட வேண்டமென அஷ்ஷெய்க் யூசுப் முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சம்மாந்துறையில் நடைபெற்றுள்ள வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலையடுத்து சிலர் கூறுகிறர்கள் ஜம்மியத்துல் உலமாவினை பிரித்து விட்டோம். இரண்டாக உடைத்து விட்டோம். என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் ஒன்றினை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளட்டும். எங்களுக்கு எவரின் உதவியும் தேவையில்லை. அல்லாஹ்வின் உதவி போதுமானது.

எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் உலமாக்களின் மானத்தில் கைவைக்ககூடாது. அவர்களைப் பற்றி துர்த்தக்கூடாது. உலமாக்கள் கண்ணியமானவர்கள். உலமாசபையும் கண்ணியமானது.

ஜம்மியத்துல் உலமா சபை தம்புள்ள பள்ளி தொடர்பில் எடுத்த முடிவுக்கு சகல முஸ்லிம்களும் ஒன்றுபட்டு நடந்தார்கள். ஆனால் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் வேண்டி நடந்தார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.