முஸ்லிம் போராளிகளுக்கு அஞ்சும் ஒபாமா - ஆப்கானிஸ்தானுக்கு இரகசியமாக சென்றார்
ஆப்கானிஸ்தானின் எதிர்கால அபிவிருத்தி குறித்தமுக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கை ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் கர்ஸாயின் இணக்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் படையினரின் பங்களிப்புக்களை அதிகரித்து, திறமையான இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா, இராணுவத் தளம் ஒன்றிலிருந்து அமெரிக்க மக்களுக்காக நேரடியாக உரை நிகழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அமெரிக்கப் படையினரின் பங்குபற்றல்களை ஜனாதிபதி ஒபாமா இதன்போது பாராட்டியுள்ளார். அல்கைதா இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து 10 வருடங்கள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அல்கைதா இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்டு ஒரு வருடம் நிவைடையும் நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் விஜயம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
Post a Comment