Header Ads



ஒஸாமா வீரமரணமடைந்தும், ஓயாது தொடரும் போராட்டம்

உலகின் பல நாடுகளை ஆக்கிரமித்து அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்து பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலைச் செய்த அமெரிக்காவின் நிம்மதியை கெடுத்தவர் உஸாமா பின் லேடன். அவரை அமெரிக்கா கொலைச் செய்ததாக அறிவித்து இன்று(மே 2-ஆம் தேதி)ஓர் ஆண்டு நிறைவுறுகிறது.

இஸ்லாமாபாத்திற்கு அருகில் உள்ள அபட்டோபாத் வீட்டில் வைத்து நிராயுதபாணியான உஸாமாவை அமெரிக்க ராணுவம் சுட்டுத்தள்ளியது. நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா செய்தியாளர்கள் சந்திப்பில் உஸாமாவின் மரணத்தை உறுதிச்செய்து அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், உஸாமாவை கொலைச் செய்ததன் மூலம் அமெரிக்காவிற்கு எதிராக உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் போராட்டங்கள் முடிவுறாது என்பதை பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் எடுத்தியம்பின.

சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த உஸாமா, முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் மனம் நொந்து போராட்ட வழிமுறையை கையிலெடுத்தார். 1980 களில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிட ஆப்கானிஸ்தானிற்கு உஸாமா வந்தார். 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் உஸாமா என குற்றம் சாட்டி அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தன.

ஆப்கானிஸ்தானை அநியாயமாக ஆக்கிரமித்து பல்லாயிரக்கணக்காண மக்களை படுகொலை செய்த பிறகு அங்கிருந்து வெளியேற வழிகளை அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. நேட்டோ ராணுவத்திற்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் ட்ரக்குகளை பாகிஸ்தானில் போராளிகள் தாக்கத் துவங்கிய உடன் 2014-ஆம் ஆண்டு அமெரிக்க படையை வாபஸ் பெறுவதாக ஒபாமா அறிவித்தார். ஆனால், போராளிகள் மேற்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாட்டு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவை ஆதரித்த அரபு தலைவர்களில் சிலர் மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியை இழந்தனர். யெமன், நைஜீரியா, அல்ஜீரியா, மாலி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கர்களின் நிம்மதி பறிபோனது. கடுமையான அச்சுறுத்தலை அமெரிக்க ராணுவமும், பாதுகாப்பு ஏஜன்சிகளும் சந்திப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமாஃபோபியாவால் பாதிக்கப்பட்ட நியூயார்க் போலீஸ் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

உஸாமாவின் உடலை கடலில் வீசி அடக்கம் செய்ததாக கூறிய அமெரிக்கா அவரது மரணத்தை உறுதிச்செய்யும் ஃபோட்டோக்களை வெளியிடப் போவதாக துவக்கத்தில் அறிவித்தது. பின்னர் பல்டி அடித்தது.

அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம் வலுப்பெறுவதற்கு ஃபோட்டோக்களை வெளியிட்டால் அமெரிக்காவிற்கு எதிரான போராட்டம் வலுப்பெற வாய்ப்பு இருப்பதால் அவற்றை வெளியிட இயலாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகர் ஜான் ப்ரன்னன் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

உஸாமாவின் கொலைக்கு பிறகு பாகிஸ்தானுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் முன்பை விட நேட்டோ படையினர் கொலைச் செய்யப்படுவது அதிகரித்துள்ளது.

நேற்று ஒபாமாவின் ஆப்கானிற்கு ரகசிய விசிட்டை முடித்துக்கொண்டு கிளம்பிய சற்று நேரங்கழித்து காபூலில் தாலிபான்கள் அதிரடி தாக்குதல்களை நடத்தி அமெரிக்காவை அதிர்ச்சியடைச் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.