பேஸ்புக் மூலம் உடல் உறுப்பு தானம்
உடல் உறுப்பு தானம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பேஸ்புக்கினை பயன்படுத்தியுள்ளதாக அதன் நிறுவனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பிரபலமான சமூக வலைதளங்களில் பேஸ்புக் உள்ளது. பேஸ்புக் வலைதளத்தின் நிறுவனர் மார்க்ஜூகர்பெர்க் கூறியதாவது,
அமெரிக்காவில் உடல் உறுப்பு தானம் செய்ய பலர் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தியுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை 1லட்சமாக இருந்தது. பின்னர் நேற்று வரை (புதன்கிழமை) 1, 80 ஆயிரத்திற்கும் அதிமானோர் தங்களது பெயரினை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரிக்க உடல் உறுப்புதானம் செய்ய ஆர்வம் காட்டுபவர்களின் மேலும் முழுவிவரங்களையும் பதிவு செய்ய பேஸ்புக் வலை தளத்தில் புதிய பிரிவு துவங்கப்பட்டுள்ளன என்றார்.
Post a Comment