யாழ்ப்பாணத்தில் மும்மொழி கொள்கையை சரியாக நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை
மும்மொழிக் கொள்கையைச் சரியான முறையில் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். இதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்தனர். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சினால் மும்மொழி நடைமுறை தொடர்பிலான ஆலோசனைக் கூட்டமொன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இதில் மும்மொழி நடைமுறை தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் எஸ்.சில்வெஸ்ரரும் கலந்துகொண்டார். இந்தக் கலந்துரையாடலிலேயே மேற்படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
1978 ஆம் ஆண்டு அரசமைப்பு விதிகளின் பிரகாரம் தமிழ், சிங்களம் என்பன அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் அது இதுவரையில் உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் தமிழ் மக்கள் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர்.
ஓய்வூதிய திணைக்களத்தில் தற்போது சிங்கள மொழியில் மாத்திரமே தகவல்கள் வழங்கப்படுகின்றன. எந்த மொழியில் கோரிக்கைக் கடிதம் விடுக்கப்படுகின்றதோ அதே மொழியிலேயே பதிலும் அனுப்பப்பட வேண்டும். மும்மொழி தெரிந்த மக்கள் தொடர்பு அதிகாரியைத் தலைமையகத்தில் பணிக்கு அமர்த்துவதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலம் முறைப்பாடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப் படவில்லை. இதனால் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெரியாமலேயே கையொப்பம் இடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்புத் தொடர்பாக படிவங்கள் தனிச் சிங்களமொழியில் காணப்படுவதால் அவற்றைத் தமிழுக்கு மொழி பெயர்க்கப் பணத்தைச் செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது. அத்துடன் திணைக்களங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் பொதுவாகச் சிங்கள மொழியிலேயே அனுப்பப்படுகின்றன.
அத்துடன் அரச வேலைத் திட்டங்கள், வங்கிக் கணக்குகளின் பெயர்கள் எல்லாம் சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன. அவற்றைத் தூய தமிழில் மொழி பெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைகளைப் பதிவு செய்ததுடன் முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி அரச அதிபர் தலைமையில் குழு ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment