பிரதமரை சந்தித்த முஸ்லிம் அரசியல் வாதிகள் என்ன கதைத்தார்கள்..? - ஒலிப்பதிவு நாடா உள்ளது
தம்புள்ள பள்ளிவாசல் விடயமாக பிரதமர் டீ.எம்.ஜயரட்ணாவை சந்தித்த முஸ்லிம் அரசியல் வாதிகள் அங்கு என்ன கதைத்தார்கள் என்பது பற்றிய ஒலிப்பதிவு நாடா எங்களிடம் இருக்கிறது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கொழும்பு நகர் தலைவரும், பத்வா நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான அஷ்ஷெய்க் யூசுப் முப்தி தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமர் ஜயரட்ணா தம்புள்ள பள்ளிவாசலை அகற்ற முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் இணக்கம் வெளியிட்டதாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தார். இருந்தபோதும் பிரதமரின் அந்த ஊடக அறிக்கையை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நிராகரித்திருந்தனர்.
எனினும் பிரதமரின் அலுவலம் மீண்டும் மற்றுமொரு அறிக்கையை விடுத்தீருந்தது. அதில் தம்புள்ள பள்ளிவாசலை மாற்றுவதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்திருந்த முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் பின்னர் தமது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே சம்மாந்துறையில் இஸ்லாமிய ஷரீஆ கற்கை நெறியில் 6 வருட கற்கை நெறியை பூர்த்திசெய்த மாணவர்க்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதீதியாக லந்துகொண்டுள்ள யூசுப் முப்தி, தம்புள்ள பள்ளி விடயமாக பிரதமரைச் சந்தித்து முஸ்லிம் அரசியல் வாதிகள் அங்கு என்ன கதைத்தார்கள் என்பது பற்றிய ஒலிப்பதிவு நாடா எங்களிடம் இருப்பதாக கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தயவு செய்து வெளியிடவும்
ReplyDeleteeven of we are to face defeat in this world we will have the judgment in the hereafter, Insha Allah
ReplyDeleteBut let the magic begin with the recordings we have !!
Fahim-Kandy
ReplyDeleteAssalamualikkum!
Mufthi awarkale,
Thayawu seithu antha olinadavai weli itunkal.
Assalamu Alaikum,,
ReplyDeleteMufthis and Ulamas have a great deal of responsibility unlike politicians. SO, if you have so called recordings, please publish it. Unless, you ulamas and Mufthee's will also fall into the same pit with politicians. Because, they never talk talk thuth truth.
Jiffry - Liverpool