இன நல்லிணக்கத்திற்காக நாச்சியாதீவு முஸ்லிம்கள் வழங்கிய 'தன்சல' (படங்கள் இணைப்பு)
படமும் தகவலும் - ஏ.ஆர்.எம்.ரபியுதீன்
நாம் வாழும் இலங்கை நாடானது பல்லின சமூக கட்டமைப்பையும் கலாச்சாரத்தையும் கொண்டது. இதில் ஒரு சமூகம் அடுத்த சமூகத்தின் உணர்வுகளையும் கலாச்சாரத்தையும் மதிக்கவேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம், அந்தவகையில் ஹிதோகம பொலிசாரும், குறிப்பாக ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி முயற்ச்சியில் நாச்சியாதீவு முஸ்லிம் மக்களும் இணைந்து இன ஒருமைப்பாட்டை வலியுறுத்தும முகமாக வெசாக் தினமான 6 / 5 / 2012 அன்று தேநீர் உபசாரமொன்றை ஹிதோகம பொலிஸ் நிலைய முன்பாக வழங்கினர்.
முஸ்லிம்கள் (தன்சல) என்று குறிப்பிடப்படும் இந்த தான சாலை நிகழ்வை செய்ததை சூழ உள்ள சிங்கள மக்கள் ஆச்சரியமாக பார்த்தனர், இன நல்லினக்கத்திட்க்கு இவ்வாறான செயற்பாடுகள் மிக முக்கியாமான பங்கினை வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை முன்னின்று ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி நிகழ்த்தினார் இது இந்த பிரதேசத்திட்க்கு மட்டுமல்லாது சர்வ தேசத்திட்க்கும் மத நல்லினக்கத்திட்கான நல்ல உதாரணம் ஆகும். இந்நிகழ்வில் பவுத்த குருமார்கள், நாச்சியாதீவு ஜும்மா மஸ்ஜிதின் இமாம் சமீர்கான், நாச்சியாதீவு பிரதேச செயலாளர் கித்சிறி, நாச்சியாதீவு ஜும்மா மஸ்ஜிதின் தலைவர் எச்.எம்.இஸ்மாயில், ஊடகவியலாளர் நாச்சியாதீவு பர்வீன், உட்பட பிரதேச சிங்கள முஸ்லிம், தமிழ் மக்கள் பலர் கலந்து கொண்ட நிகழ்வை படங்களில் காணலாம் .
இன நல்லிணக்கம் என்பது முக்கியம் தான், ஆனால் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை.
ReplyDeleteநபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் , சிறுபான்மை சமுதாயமாக இருந்துதான் மக்களுக்கு இஸ்லாத்தை சொன்னார்கள். எங்களை விடவும் அவர்களுக்கு இன நல்லிணக்கம் தேவைப் பட்டது. ஆனால் ஒரு போதும் ஏனைய கலாசாரங்களை அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
எவர் ஒருவர் ஏனைய சமுதாயத்தின் கலாச்சாரத்தை பின்பற்றுவாரோ அவர் எம்மை சார்ந்தவர் அல்லர் என்பது சஹீகான ஹதீஸ், இந்நிலையில் தன்சல என்ற பெயரில் குறிப்பிட்ட தன்சல தினத்தில் முஸ்லிம்கள் ஏற்ப்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வு அடிப்படையில் பிழையானது.
இன நல்லிணக்கம் என்பது கலாசார கலவை அல்ல. அது ஒருவகைப் புரிந்துணர்வு. நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் முஸ்லிம்கள் மற்ற மத மக்களோடு மிகவும் பண்போடு வாழ கடமைப்பட்டுள்ளோம் , ஆனால் அவர்களுடன் எவ்வாறு பண்புடன் வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் எமக்கு தெழிவாக காட்டித் தந்துள்ளது. எதையும் செய்ய வேண்டிய முறைப் படி செய்ய வேண்டும்.
தன்சல என்பது பௌத்தர்கள் பழைய ஜென்மத்தில் செய்த பாவங்கள் அழிவதற்காக கொடுக்கும் ஒரு வகை அன்னதானம். இதே பெயரில் முஸ்லிம்களும் அன்னதானம் கொடுத்தால், இஸ்லாத்தை பற்றிய தவறான ஒரு கண்ணோட்டம் அவர்கள் மத்தியில் ஏற்ப்படும். நான் இந்த உலகில் வாழ்வது இஸ்லாத்தை நடைமுறையாலும் இன்ன பிற வழிகளாலும் மற்ற சகோதரர்களுக்கு எத்தி வைத்து அவர்களை நரகில் இருந்து காப்பாற்றத் தான், இறைவன் பற்றிய அவர்களின் பிழையான கருத்தை மேலோங்க செய்ய அல்ல .....
தாரளமாக மற்ற மத சகோதரர்களுடன் உண்ணுங்கள் , பருகுங்கள் , விளையாடுங்கள் சந்தோஷமாக வாழுங்கள் . ஆனால் இவற்றை செய்ய வேண்டிய முறைப்படி செய்யுங்கள். இன்ன தினத்தில் இதே பெயரில் நிகழ்வை நடத்துவது பிழையான ஒன்று. இதே நிகழ்வை இன்னொரு தினத்தில் வேறொரு பெயரில் நடத்தியிருப்பின் இது பிழையாக கருதப் பட மாட்டாது
இதனை ஏற்ப்பாடு செய்த ஏற்பாட்டாளர்களின் தூய எண்ணத்தை அங்கீகரித்து அவர்களுக்கு நன்மையை வாசங்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே,
இன்னொரு முறை இதே தவரை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்கே இங்கே நான் கருத்துரை இடுகின்றேன், அல்லாஹ் எல்லோருக்கும் நல் வழி காட்டுவானாக .. ஆமீன்
ஓவராக அடுத்தவனுக்கு குடுத்து கடைசில வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்.
ReplyDeleteலாகும் தீனுக்கும் வலியாத்தீன் எண்டத மறக்க வெண்டாம். நீங்க நெனச்ச படி ஆடி இஸ்லாத்த கேவலப் படுத்த வேணாம்.
இன நல்லுறவு என்ற பெயரில் இவர்கள் செய்யும் இந்த முயற்சியானது இவர்கள் இன்னும் இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை விளங்கி கொள்ளாமல் ஏதோ ஒரு ஆர்வக் கோளாறினால் செய்வது போலத்தான் இருக்கிறது. அல்லாஹ்வை திருப்திப்படுத்துவதை விடவும் அடுத்த சமயத்தவர்களை திருப்திப் படுத்த செய்யப்படும் இவ்வாறான முயற்சிகள் பாரட்டுகுரியனவன்று.
ReplyDelete