Header Ads



''தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்தமையால் அதுபற்றி நான் பேசமாட்டேன்''

(கியாஸ் ஷாபி, எம்.பரீட்)

தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளமையால் அது பற்றி நான் பேசமாட்டேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சரும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். "முடிந்த பிறகு குப்பையை கிளறுவதும் வீர வசனம் பேசுவதும் தேவையில்லாத விடயமாகும். இதற்கு மேல் தம்புள்ள பள்ளிவாசல் பற்றி பேசினால் என்ன நடக்கும் என்று எல்லோருக்கும் தெரியும்" என அவர் குறிப்பிட்டார்.

சதிகாரர்களுக்கு எல்லாம் மிகைத்த சதிகாரன் ஒருவன் இருக்கும் போது நாங்கள் எதையும் கண்டு அஞ்சவேண்டியதில்லை. கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும். இதற்கு முன்னுதாரணமாக நடந்த பல சம்பவங்கள் அமைந்திருக்கின்றன எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் ஹக்கீம்,  கிண்ணியாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசோடு இணைந்திருப்பது பற்றி இன்று மக்கள் மத்தியில் பலவிதமாகப் பேசப்படுகின்றது. அரசில் எமக்கிருக்கின்ற அந்தஸ்த்து தொடர்பாக இன்றும் பெரிய பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன. அரசோடு இருக்கிகின்ற எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண சபை உறுப்பினர்களோ எமது அந்தஸ்தை தீர்மானிப்பவர்கள் அல்ல என்பதை இவ்விடத்தில் எத்திவைக்கின்றேன்.

தமிழ் தேசியம் விட்ட தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற போது தமிழ் ஊடகங்களால் நான் விமர்சிக்கப்படுகிறேன். ஒரு தேர்தல் பகிஷ்கரிப்பினால் விடுதலை புலிகள் தங்களை அழித்துக்கொண்டார்கள் என அவர்களின் மகா தவறைச் சுட்டிக்காட்டினேன். இதற்காக தமிழ் பத்திரிகையாளர்கள் என்னை விளாசித் தள்ளிவிட்டார்கள். எவ்வாறு எழுதினாலும் அதைப் பற்றி நான் அலட்டிக்கொள்வதில்லை. ஏனெனில் சிலவேளை பத்திரிகைகள் உயிர் வாழ அவை வேண்டியிருக்கின்றன" என்றார். - TM

6 comments:

  1. முடிவுக்கு வந்ததா ???
    என்ன பேசுகிறார் இவர் ???? !!!

    ReplyDelete
  2. enna mudiwukku wanthu irukkuthu

    ReplyDelete
  3. kaiyalahaza thalaiwarhal
    yaar muslimkalin unmaiyana thalaiwarhal

    ReplyDelete
  4. ,udatalawinna neththiyadi06/05/2012, 15:53

    muduhelumbulla president.athu than thairiyama pesurar.thada bada case illa hakeem.thala ullawanukku than thalaivara patti therium.pottu vaya

    ReplyDelete
  5. தம்புள்ள பள்ளி விவகாரம் - எந்தவொரு சமூகத்தின் நலனுக்கும் பங்கம் இல்லாமல் தீர்க்கப்படும் - மஹிந்த
    'தம்புள்ளை தகராறு கட்டுமீறிப் போவதை தான் அனுமதிக்கப்பபோவதில்லை எனவும் எந்தவொரு தனிநபரின் அல்லது சமுதாயத்தின் நலனுக்கும் பங்கம் ஏற்படாத வகையில் இந்த பிரச்சினையை தீர்க்கவுள்ளதாகவும் ஜனாதிபதி எனக்கு உறுதியளித்தார்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று கூறினார்.

    http://www.jaffnamuslim.com/2012/05/blog-post_65.html


    ஹக்கீமுடன் மஹிந்த தொலைபேசியில் அவசரபேச்சு - தம்புள்ள பள்ளி விவகாரம் ஆராயப்பட்டது...

    http://www.jaffnamuslim.com/2012/04/blog-post_218.html

    Pls CHK this news on the same website.
    (Kuraikudamaaka irunthukondu karutthucholawathai anaivarum thavirthukkollavendum.

    ReplyDelete
  6. தம்புள்ள பள்ளி தொடர்பா என்ன முடிவு வன்திருகின்று சொல்ல முடியுமா ஹகீம் ஏண்டா ஜனாதிபதி இது தொடர்பா எதுவும் சொல்லாத வரைக்கும் எந்த முடிவும் வராது

    ReplyDelete

Powered by Blogger.