ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வாயை பார்த்தவாறு ஒரு இளைஞன்
(யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கட்டுரையொன்றை இங்கு பதிவிடுகிறோம்)
வலக்கரம் - புத்தளம்
தம்புள்ளை ஹைரியா பள்ளிவாயல் எங்கள் நாட்டு ஜனாதிபதி கொரியா விஜயம் மேற்கொள்ள முன்பு நடைபெற்றதை எல்லோரும் அறிவார்கள். அந்த விடயத்தின் பின்பு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு கிடையில் ஒரு பதற்றம் என்ன செய்வது என்று ஒன்றும் புரியாத கலக்கம். தொலைகாட்சியில் செய்திகளும் , மக்கள் மத்தியில் தொலைபேசி அழைப்புக்களும், குறுஞ் செய்தி மூலமாக செய்திகளும், இணையத்தில் மக்கள் மனதை திடுக்க வைக்கும் வீடியோ நாடாக்களும் என ஒரு நாள் முழுதும் நம்மை நடுக்கி விட்டது.
நமது ஜமியதுல் உலமாவும் கூட அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றாக அழைத்து ஒரு முடிவெடுத்து அறிக்கை விட்டு முஸ்லிம் மக்களை கொஞ்சம் அமைதி படுத்தியது ஆனாலும் சில பிரதேசங்களில் ஹர்த்தாளுடன் கூடிய ஆட்பாட்டங்களும் இடம் பெற்றன. மின்னல் நிகழ்சிகள் கூட மக்கள் மத்தில் பெரும் வரவேற்றை பெற்றுக்கொண்டது இந்த விடயத்தின் தலைப்பு மூலமாக. இப்படி ஒரு முடிவில்லாமல் நகர்ந்து சென்ற முற்றுப்புள்ளிக்கு அல்ஹம்டுளில்லாஹ் என ஒரு முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை நமது மக்கள் மத்தில் அப்படியே ஒளிமயமானது அதாவது "நமது அதிமேதகு ஜனாதிபதி கொரியா பயணத்தை முடித்து இலங்கை திரும்பி வந்துள்ளார்" என்ற செய்தி.
அனைத்து மக்களும் ஜனாதிபதியை நோக்கி அமைதியாக காத்திருந்தனர், ஆங்காகே ஜனாதிபதி கூறப்போகும் விடயம் இது தான் இது தான் என சில விடயங்களும் ஊகிக்கப்பட்டுகொண்டிருந்தன. ஆனால் அவரோ காத்திருக்கும் மக்களை இன்னும் இன்னும் காக்க வைத்தார், இதற்கிடையில் முஸ்லிம் அமைச்சர்களை தனித்தனியாக அறிக்கை விடக்கூடாது என்று கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருந்த ஜமியதுல் உலமாவின் சத்தமும் மக்களுக்கு கேட்காமல் போய் விட்டது காரணம் சூடு பிடித்த இந்த ஹைரியா மஸ்ஜித் விடயம் மக்கள் மத்தியில் இருந்து மறைந்துவிட ஆரம்பித்தது.
அது மனித இயற்கையின் நியதி அல்லவா, ஆனாலும் அமைதியாய் இருந்து சில முஸ்லிம் கட்சிகளும் , இயக்கங்களும் இதை மறக்காமல் மேலும் குரல் கொடுத்தவாறு உள்ளது. இப்படி எதிர்ப்பார்த்து இருந்து மக்களுக்கு மீண்டுமொரு சந்தோசமான செய்தி கிட்டியது அதாவது "நீதி அமைச்சருக்கும் நமது நாட்டு ஜனாதிபதிக்கும் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது" என்ற ஒரு செய்தி. ஆனால் அதிலே ஒரு விடயமும் ஜனாதிபதி கூறினார் என்று பெரிதாக தெரிவிக்கப்படவில்லை.
ஆனாலும் நான் இன்னும் ஜனாதிபதியின் வாயை பார்த்தவாறுதான் இருக்கிறேன். ஒரு நாளைக்கு எத்தனை முறைதான் போன பத்திரிக்கையை பார்ப்பது. ஒன்றும் கிடையாது , நமது முஸ்லிம் அமைச்சர்மார்களும், அரசியல்வாதிகளும் கருத்துக்களோடு வருகிறார்களே ஒழிய ஜனாதிபதியை சந்தித்தோம் என்ற தகவலோடு வர மறுக்கிறார்கள் (அவங்க என்ன வச்சிகிட்ட வஞ்சகம் செய்றாங்க?), அவர்கள் சந்தித்தால் தானே தகவல் வரும்.
மக்கள் மத்தியில் நகரும் முற்றுபுள்ளியை இருந்த இந்த விடயம், தூங்கும் புள்ளியாய் மாறி மக்கள் மத்தில் இருந்து கனவு காணுகிறது என்று கூறலாம், ஆனாலும் இந்த விடயத்துக்கு நமது நாட்டு ஜனாதிபதி, "நாம் அனைவரும் இலங்கை என்ற தாயின் பிள்ளைகள்" என்று கூறிய நமது ஜனாதிபதியின் கருத்து வெளிவராமல் தூங்க மாட்டோம். இந்த ஹைரியா மஸ்ஜித் தகர்ப்பு விடயம் தூங்கிவிட்டால் அதுவே வருங்காலத்தில் நமது பலவீனம் ஆகிவிடும்.
முஸ்லிம் அரசியல்வாதிகளே மின்னலின் கதைத்தால் போதாது, பத்திரிகையில் அறிக்கை விட்டால் போதாது, "இது மார்க்க விடயம் ஒன்றாய் ஒற்றுமையாய் போராடி முடிவு எடுக்கப்பட வேண்டிய விடயம்" என பேசினால் போதாது, 100 சட்டத்தரணிகள் வரலாற்றில் முதன் முறையாக ஒன்றாக கூடி இந்த விடயம் சம்பந்தமாக பேச முடியுமானால். ஜமியதுல் உலமாவின் தலைமையில் பெரும்பான்மை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றாய் நிற்க முடியுமானால். ஏன் நீங்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்து ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்து எங்கள் , உங்கள் ஜனாதிபதியை சந்திக்க கூடாது. ஒருவர் ஒருவராக appoinment எடுக்க முயற்சிக்காமல் அனைவரும் ஒரே நேரம் ஒன்றாய் appoinment எடுத்து நமது நாட்டில் இருக்கும் முஸ்லிம்களுக்கான வளமான எதிர்காலத்தை "வளமான எதிர்காலம்" என்ற கொள்கையோடு பயணிக்கும் ஜனாதிபதியிடம் இருந்து பெற்று கொடுங்கள். அப்படியே அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு சிங்கள குறான் பிரதியையும் கொடுத்து வாருங்கள்.
முன்மொழிவதை விட்டு விட்டு , முயற்சி செய்யுங்கள் . இதிலே எந்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரையும் தள்ளிவைக்க வேண்டாம். மனிதர்கள் தப்பு செய்யக்கூடியவர்கள், குத்திக்காட்டுவதை கைவிட்டு கட்டிப்பிடித்து முசாபஹா செய்து ஒன்றாய் செல்லுங்கள்.
வாய்பார்த்து நிற்கும் என்னைப்போன்ற பலருக்கு உங்கள் வாக்கு கிடைக்காமல் போனாலும் அல்லாஹ்வின் வாக்கு நிச்சயம் கிடைக்கும், இந்த பிரச்சினை மக்களால் தீர்க்கப்பட்டால் ஒரு கலவரமாகத்தான் மாறிச்செல்லும். அதுவே நீங்களாகிய அரசியல்வாதிகளால் தீர்க்கப்பட்டால் அமைதியாக இருந்து கொள்ளும். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே - பெரும் பான்மை சகோதரகளுக்கு தவ்வா செய்யும் சரியான நேரமும் இதுவே என்பதையும் மறக்க வேண்டாம்.
I ACCEPT YOUR WORDS WE MUST DO IT IN CORRECT TIME THEN WE CAN GET WHAT WE NEED IF NOT WE WILL NOT GET ANYTHING BUT SILENCE. ALSO MY KIND REQUEST TO ALL PARLEMENT MEMBERS TOGETHER AND GO TO MAMA AND GET GOOD NEWS FOR OUR MUSLIM PEOPLE. I THINK THEY WILL DO AS SOON AS POSSIBLE. WAIT AND SEE.
ReplyDeletePLEASE DO IT NOW
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் .
ReplyDeleteஉண்மையே எழுதியுள்ளீர்கள் .ஆனால் நல்ல முடிவு வரும்மென்று எதிர்பார்க்க வேண்டாம் .நீங்கள் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மஹிந்த சிந்தனை எந்த வடிவில் மவுனம் கலையப்போகிறது என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்
Meeran