வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர் விவகாரம் - கல்வியமைச்சருக்கு றிசாத் பதியுதீன் கடிதம்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
வன்னி மாவட்டத்தில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களை ஆசிரிய உதவியாளராக நியமிப்பதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கையெடுக்கபட வேண்டிய அவசியத்தை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன்,கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வலியுறுத்தி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வன்னி மாவட்டத்தில் உள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு 2005 ஆண்டு 3000 ரூபா வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதன் பின்னர் காணப்பட்ட அசாதாரண சூழல் காரணமாக அவர்களை உதவி ஆசிரியர்களாக நியமிப்பதில் கால தாமதம் காணப்பட்டுவந்ததது.தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் அவர்களது சேவை மிகவும் முக்கியமானதாகவுள்ளதுடன்,10 வருடங்களுக்கு மேலாக தொண்டர் ஆசிரியர்களாக அனைத்து தகுதியுடனும் பணியாற்றும் இவ்வாசிரியர்களை ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்குவதற்கு தேவையான அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment