Header Ads



முஸ்லிம் மாணவர்கள் 9 ஆம் வகுப்பிலேயே பாலியல் தொடர்பு - மேல் மாகாணத்தில் அதிர்ச்சி

இலங்கையில் முஸ்லிம்கள் 8 சத வீதமானவர்களாக வாழ்கின்றனர். எனினும் சிறைச்சாலைகளில் உள்ளவர்களுல் 17 சதவீதத்தினர் முஸ்லிம்களே. இதுவே நமது நாட்டு முஸ்லிம்களின் நிலை என ஜாமிஆ நளீமிய்யா கலாபீட மூத்த விரிவுரையாளரான அஷ்ஷெய்க் பளீல் தெரிவித்துள்ளார்.

அநுராதபுர மாவட்ட பாடசாலைகளில் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முஸ்லிம் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்றைய மாணவர் சமூகம் கல்வியில் நாட்டம் காட்டாது ஆபாச, சினிமாப் படங்களில், தொலைக்காட்சி நாடகங்களில் அதிக நாட்டம் கொண்டு காணப்படுவதால் பல்வேறு பாவச் செயல்கள் நடைபெறுகின்றன.

அண்மையில் மேல் மாகாணப் பகுதியிலுள்ள பிரபல்யமான முஸ்லிம் தேசியப் பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தர மாணவர்கள் 18 பேரினை எடுத்துக் மேற்கொண்ட ஆய்வொன்றில் இந்த 18 பேரில் 16 பேர் பாலியல் ரீதியாக ஏதோவொரு வகையில் மற்றொருவருடன் தொடர்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் இன்று முஸ்லிம் மாணவரின் நிலை.

பெற்றோர்களாகிய நாங்கள் சிறந்த முன்மாதிhயை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். குடும்பத்தின் முன்மாதிரியில்தான் அவர்களது எதிர்காலதம் தங்கியுள்ளது. ஒரு குழந்தையைஅ ஒழுக்கமுள்ளனாக வளர்ப்பதில் அதிக செல்வாக:குச் செலுத்துவது அவனது குடும்பமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.