Header Ads



97 வயது முதியவர் நான்காவது முறையாக பட்டதாரியாகி சாதனை படைத்தார்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த, 97 வயது நபர் நான்காவது முறையாக பட்டதாரியாகியுள்ளார். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆலன் ஸ்டீவார்ட்,97. இவருக்கு திருமணமாகி தற்போது, 12 பேரக்குழந்தைகளும், ஆறு கொள்ளு பேரக்குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த, 1915ம் ஆண்டு பிறந்தார்.

1936ம் ஆண்டு பல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதற்கு அடுத்த படியாக, ஒரு பட்டம் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2006ம் ஆண்டு, சட்டப்படிப்பில் பட்டம் பெற்று, உலகிலேயே அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற, கின்னஸ் சாதனையை படைத்தார். தற்போது, ஆய்வக அறிவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். லிஸ்மோரில் உள்ள சதர்ன் கிராஸ் பல்கலை கழகத்தில், இந்த படிப்பை முடித்துள்ளார். உலகில் அதிக வயதில் பட்டம் பெற்றவர் என்ற பெயர், தற்போது இவருக்கு, இரண்டாவது முறையாக கிடைத்துள்ளது.

இதுகுறித்து, இவரின் பேராசிரியர் சோனியா பிரவுனி குறிப்பிடுகையில், "ஆலன் பெரும்பாலும், கணினியில் இணையத்தின் உதவியால் தான் படித்தார். இதன் மூலம், அவர் பல்கலை கழகத்துக்கு வராமல், நேரத்தை மிச்சப்படுத்தி படித்துள்ளார்' என்றார்.

No comments

Powered by Blogger.