வாழைப்பழ துண்டு தொண்டையில் சிக்கியது - 9 மாத குழந்தை வபாத் - மானல்லயில் சம்பவம்
வாழைப்பழத்துண்டு தொண்டையில் சிக்கி ஒன்பது மாதக்கைக் குழந்தையொன்று மாவனல்ல மாவட்ட வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது. மாவனல்ல ஹெம்மாதகமை வீதியைச் சேர்ந்த எம். சனீர் முஹம்மத் என்ற இக்குழந்தையின் தந்தை மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பி சில நாட்களில் இப்பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உறவினர் வீட்டில் மதிய உணவுக்காக சென்றிருந்த போது குழந்தையின் தாய் ஊட்டிய வாழைப்பழத் துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்டதால் அக்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குழந்தை மாவனல்லை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியர்களின் முயற்சி பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment