Header Ads



மாணவர்களை பிரம்பால் அடித்தால் ஆசிரியர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் - இந்தியாவில் பரிசீலனை

பெரும்பாலும் ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை மற்றும் ராக்கிங்கிற்கு பயந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கிறார்கள்.   பள்ளி, கல்லூரிகளில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டு தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் கொடுக்கும் கடும் தண்டனைகளில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு சில புதிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.

அதன்படி மாணவர்களை இனி ஆசிரியர்கள் பிரம்பால் அடிக்கக்கூடாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பிரம்பால் மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு என்னென்ன தண்டனை கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  

பிரம்பால் கண்மூடித்தனமாக மாணவர்களை அடிக்கும் ஆசிரியர்களுக்கு 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடித்து இரண்டாவது தண்டனை ஒரு ஆசிரியர் குற்றச்சாட்டுக்கு உள்ளானால் அந்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கொடுக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த பரிந்துரைகளை அமைச்சரவை பார்வைக்கு அனுப்பியுள்ளது. பள்ளி மாணவ - மாணவிகளை மதரீதியான பணிகளில் ஈடுபடுத்துபவர்களுக்கு 3 ஆண்டு தண்டனை கொடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் நலன் கருதி மத்திய அமைச்சகம் தற்போதுதான் முதன் முதலாக இந்த பரிந்துரைகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.