Header Ads



மாதாந்தம் 50.000 ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் அரசியல் வாதிகள் வரி கட்டவேண்டும்

ஐம்பதாயிரம் ரூபாவுக்கு அதிகமாக மாத வருமானத்தைப் பெறும் அரசியல்வாதிகள் மற்றும் அரசஅதிகாரிகள் இனிவரும் காலங்களில் வருமான வரியைச் செலுத்த வேண்டும். இதற்கான சுற்றறிக்கை விரைவல் வெளியிடப்படவுள்ளது என்று நிதி அமைச்சின் செயலாளர் பி.பி. ஜெயசுந்தர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

50 ஆயிரம் ரூபாவை வருமானமாக பெறும் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் 4 வீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் இந்த நடைமுறை இருக்கவில்லை. எனினும் நாட்டின் நலன் கருதி இந்த நடைமுறைகளை பின்பற்ற அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் அர்ப்பணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. அரசியல் வாதிகளின் மற்றும் அரச அதிகாரிகள் வருமானம் என்னும் பொழுது லஞ்சம், ஊழல், கப்பம் மூலம் பெறப்படும் பணமும் இதில் அடங்குமா?

    ReplyDelete

Powered by Blogger.