Header Ads



இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சகோதரிக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதன் பேரில் பாரபட்சமாக நடத்தப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பெண்மணிக்கு 50 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்ஸாஸைச் சார்ந்த சூஸன் பஷீர் என்ற 42 வயது பெண்மணி தான் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவராக இருந்த சூஸன் பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இதனை விரும்பாத சூஸன் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் அவரிடம் பாரபட்சமாக நடந்துகொண்டனர். ஹிஜாப் அணிவதற்கும், மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரது பெயருடன் தீவிரவாதி என சேர்த்து அழைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூஸன் நீதிமன்றத்தை அணுகினார். டெலி கம்யூனிகேசன் துறையில் பிரபல நிறுவனமான ஏ.டி அண்ட் டி நிறுவனத்தின் மீதுதான் சூஸன் வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் சூஸனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இழப்பீடாக 50 லட்சம் டாலரை வழங்க உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச் செய்வோம் என்று நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் பழிவாங்கும் நடவடிக்கையாக நிறுவனத்தில் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக சூஸன் கூறிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

1 comment:

  1. No worries sister allah is great. allah will with you.

    ReplyDelete

Powered by Blogger.