Header Ads



முச்சக்கர வண்டி பின்ஆசனத்தில் இனிமேல் 3 பேர் மாத்திரமே பயணிக்க அனுமதி

TM

முச்சக்கரவண்டியொன்றின் பின் ஆசனத்தில் 3 பயணிகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதிக்கும் சட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை முதல் பொலிஸ் திணைக்களம் கடுமையாக அமுல்படுத்தவுள்ளது.

வீதி விபத்துக்களை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை உதவியளிக்குமென பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து மே மாதம் 7ஆம் திகதிவரையான காலத்தில் 27 முச்சக்கரவண்டி விபத்துக்கள்இடம்பெற்றதாகவும் இவ்விபத்துக்களில்; 34 பேர் பலியானதாகவும் அவர் கூறினார்.

முச்சக்கரவண்டி விபத்து ஏற்பட்டால் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சேவையில் ஈடுபடும் 67,000 முச்சக்கரவண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதேவேளை, முச்சக்கரவண்டியொன்றின் பின் ஆசனத்தில் 3 பயணிகள் மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதிக்கும் சட்டத்திற்கு முச்சக்கரவண்டி மீற்றர் ரக்ஸி சங்கம்  நேற்று வரவேற்புத் தெரிவித்துள்ளது.

1 comment:

Powered by Blogger.