யாழ் முஸ்லிம் வட்டாரத்தை 21 வருடங்களின் பின் பொறுப்பேற்கும் கிராம அலுவலர் ஜினூஸ்
1990ல் யாழ் முஸ்லிம் வட்டாரத்தினை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட கிராம அலுவலர் சுல்தான் ஜினூஸ் கடந்த 20 வருடங்களாக நீர்கொழும்பு, கம்பஹா, உடுகம்பொல, மினுவாங்கொட ஹென்டி மகர, மீண்டும் நீர்கொழும்பு பெரியமுல்லை போன்ற பிரதேசங்களில் கடமையாற்றியவராவார்.
மொழிப் பிரச்சினைகள் இருந்த போதிலும் அதனை சவாலாக எதிர்கொண்டு முறைப்படி அந்த மொழியினை கற்று அந்த மொழியிலேயே 20 வருடங்களாக கிராம அலுவலராக சேவையாற்றியுள்ளார். 2000ம் ஆண்டிலிருந்து நீர்கொழும்பு பெரியமுல்லை பிரிவினை பொறுப்பேற்று சிறந்த சேவையாற்றி அப்பகுதி மக்களின் நன்மதிப்பினை பெற்றிருந்தார். 39 கிராம அலுவலர்கள் கடமையாற்றும் நீர்கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று மொழிகளிலும் கடமையாற்றக்கூடிய ஒரே ஒரு முஸ்லிம் கிராம அலுவலராவார். 1999ல் சிங்கள மொழிமூலம் தரம் ஒன்றிற்கான பரீட்சை எழுதி அத்தரத்திற்கு உயர்த்தப்பட்டார். அத்துடன் நீர்கொழும்பு பிரதேச செயலகத்தில் சிங்கள, தமிழ் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்லை மக்கள் தங்களின் அன்பின் காரணமாக இந்த இடமாற்றத்தினை விரும்பாவிட்டாலும் சிதைக்கப்பட்ட, அழிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் சமூகத்தினை கட்டி எழுப்பும் ஒரு சிறிய பங்களிப்பாக நான் எடுக்கும் இந்த இடமாற்றத்திற்கு தங்கள் ஆதரவினை நல்கியிருந்தனர். அந்த இடமாற்றமும் கடந்த ஆறுமாத காலமாக இழுத்தடிக்கப்பட்டு சில அரச உயர் அதிகாரிகளின் மனப்பூர்வமாக சம்மதமின்மைக்கு மத்தியிலேயே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2012.05.02 ஆம் திகதியிலிருந்து யாழ் முஸ்லிம் வட்டாரம் துஃ87 பிரிவுக்கு தற்போது இடமாற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது. 'அல்கம்துலில்லாஹ்' .
இவ்வேளையில் தன்னோடு பலவழிகளிலும் உதவி ஒத்தாசை புரிந்த மற்றும் யாழ் முஸ்லிம்களை அரவணைத்து உதவி செய்து அவர்களுடன் இரண்டரக் கலந்திருக்கும் பெரியமுல்லை முஸ்லிம்களுக்கும் பெரியபள்ளிவாசல் நிர்வாக சபையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றார். சென்ற 2011ம் ஆண்டு நீர்கொழும்பு பிரதேச செயலகத்தின் மூலமாக இனமத நல்லொழுக்கத்திற்கான ஒரு இப்தார் நிகழ்ச்சியையும் பெரியமுல்லை பகுதியில் நடாத்தி மக்களின் நன்மதிப்பினை பெற்றிருந்தார்.
1990 ல் இடப்பெயர்விற்குப் பின் யாழ் முஸ்லிம்களுடன் சேவை புரியும் வாய்ப்பு குறைந்திருந்தாலும் வடக்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தவர்களுக்கான சங்கம், பின் சமூக கல்வி அபிவிருத்திக்கான (sedo) 'செடோ' எனும் அமைப்பின் மூலமும் இடம்பெயர்ந்த மக்களுக்கான சேவையை தொடர்ந்திருந்தார். இந்த செடோ அமைப்பின் மூலமாக யாழ் முஸ்லிம் லன்டன் அசோசியேசன் மற்றும் புத்தளம் மெற்றோ அமைப்பின் உதவியுடன் 5 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியில் புத்தளம் லு.ஆ.ஆ.யு ரத்மல்யாய பகுதிக்கு அண்மையில் ஒரு முஸ்லிம் மையவாடியும், ஜின்னா மைதானமும், பள்ளிவாசல் ஒன்றிற்கும் பாடசாலைக்குமான இடமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பில் பல வசதி வாய்ப்புக்கள் இருந்தும், அங்குள்ள முக்கிய பல புள்ளிகளின் செல்வாக்குகள் துணை இருந்தும் அதனை விட்டு பல சிரமத்திற்கு மத்தியில் யாழ் முஸ்லிம் வட்டாரத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் இவரின் முக்கிய நோக்கம் யாழ் முஸ்லிம் பகுதியில் மீள்குடியேற்றத்தினை ஊக்குவிப்பதற்கும் ஏற்கனவே அங்கு குடியேறியுள்ள மக்களின் நலன்புரி விடயங்களில் கூடிய கவணம் செலுத்தி அவர்களின் மேம்பாட்டுக்கு உழைப்பதுமேயாகும்.
மேலும் யாழ் சின்னப்பள்ளிவாசல், மையவாடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளை முன்னேற்றுவதும் முக்கியமானதாகும். இதற்காக யாழ் முஸ்லிம் பகுதியில் குடியேறியிருக்கும் மக்களினதும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளினதும் மற்றும் அங்கு சமூக சேவையாற்றி வரும் சமூக அலுவலர்களினதும் யாழ் முஸ்லிம் மாநகர சபை உறுப்பினர்களினதும் முஸ்லிம் பிரதி மேயரினதும் உதவி ஒத்தாசைகளை பெரிதும் வேண்டி நிற்கின்றார்.
எல்லாம் வல்ல இறைவன் யாழ் முஸ்லிம் வட்டாரத்தினை மீண்டும் அதன் பழைய நிலைக்கு ஓரளவிற்காவது கொண்டுவர நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்...!!
எம்.எம்.எம். அஜ்மல்
மார்க்க, பள்ளிவாசல் விடயங்களில் இவர் தலையிடாமல் இருந்தால் மிக மிக நல்லது.
ReplyDeleteமார்க்க விடயங்களில் உலகமே குரான்,ஹதீஸ் என்று முன்னேறிக்கொண்டு இருக்கிறது .அதன்படி வாழ்ந்தாலே
ReplyDeleteநமது பிரச்சனைகளை அல்லாஹ் இலகு படுத்திவைப்பான் .யாழ் முஸ்லிம்களுக்கு இவர் மூலம் நல்லது நடக்கட்டும்.
வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரிதான் .
Well said..........
ReplyDeletewe appreciate for his devoted service to his hometown & hope it continues forever
ReplyDelete