Header Ads



லிபியாவில் பிரதமர் அலுவலகம் 200 ஆயுததாரிகளால் முற்றுகை

லிபியாவின் பிரதமர் அலுவலகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். 200 ற்கும் அதிகமான ஆயுததாரிகள், பிரதமர் அலுவலகத்தை சுற்றிவளைக்க முற்பட்டதாகவும் அதன் பின்னர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், பிரதமர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு இதன்போது பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று லிபியத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் மற்றும் துணைப் பிரதமர் ஆகியோர் அலுவலகத்திலிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. லிபியாவின் முன்னாள் கிளர்ச்சிக் குழு ஒன்றே இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதன் பின்னர், லிபியாவில் அமைதியை நிலைநாட்டுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

1 comment:

  1. காபிர்களை நம்பி போராட்டங்களை முன்னெடுத்தால் இததான் நிலை.மத்திய கிழக்கு முழுவதும் ஆட்சி மாற்றம் வர வேண்டியதுதான் ,அதற்காக யூத, கிறிஸ்தவர்களை நாடி அவர்கள் உதவியக்கொண்டு ஆட்சி அமைத்தால் இதுதான் கதி .அல்லாஹ்விடம் தவக்கல் வைத்துப் போராடியிருந்தால் நிச்சயம் அல்லாஹ்விடமிருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிகள் கிடைத்திருக்கும் .யா அல்லாஹ் நாங்கள் உன் புறத்திலிருந்து உதவிகளை எ
    திர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.எண்கள் ஈமானை உறுதிப்படுத்துவாயாக.
    Daoud Tharik

    ReplyDelete

Powered by Blogger.