எகிப்தின் வன்முறை - 20 பேர் மரணம் - கண்டிக்கிறது இஹ்வானுல் முஸ்லிமின்
எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் நடந்த கலவரத்தில், 20 பேர் பலியாகியுள்ளனர். எகிப்தில் ஹோஸ்னி முபாரக் ஆட்சி, மக்கள் புரட்சி மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து ராணுவ உயர்மட்டக் குழு தலைமையில் இடைக்கால ஆட்சி நடக்கிறது. இம்மாதம், 23 மற்றும் 24ம் தேதி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற உள்ளது.
ஏழு பிரதான கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. தேர்தல் ஆணையமும், இடைக்கால ராணுவ உயர்மட்ட குழுவும் தேர்தலை முறைப்படி நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சில கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.
இதற்கிடையே தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தை கண்டித்து, சில கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒரு வன்முறை கும்பல் கல், கண்ணாடி மற்றும் கையெறி குண்டுகளை வீசினர். ஆறு மணி நேரம் நடந்த இந்த சண்டையில், 20 பேர் கொல்லப்பட்டனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக, ராணுவம் சில கூலி படைகளை ஏவி, இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளதாக, முஸ்லிம் சகோதர சுதந்திர நீதி கட்சியும் சுயேட்சைகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Post a Comment