Header Ads



பள்ளிவாசல் 2 வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்டது - ஆசாத் சாலியிடம் கூறிய மஹிந்த

தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதை தான் முன்கூட்டியே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் வன்உம்மா வானொலி சேவைக்கு அவர் வழங்கியுள்ள சிறப்பு செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, நான் ஜனாதிபதியுடன் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் தொடர்புகொண்டேன். பள்ளிவாசல் சட்டபூர்வ இடமென்றும் சுட்டிக்காட்டினேன். எனினும் ஜனாதிபதியோ அந்தப் பள்ளிவாசல் 2 வருடங்களுக்கு முன்னரே கட்டப்பட்டது என்று கூறினார்.

அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் இதன உண்மையை அறிந்துகொள்ளுமாறும் நான் ஜனாதிபதியிடம் கூறினேன். நான் அதனை மறுத்தேன். ஜனாதிபதி கோபத்துடன் தொலைபேசியை துண்டித்துவிட்டார்.

ஜனாதிபதி பின்னர் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனிடம் இதுகுறித்து விசாரித்துள்ளார். சிங்கள மதகுருமார் இவ்வாறுதான் தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்கள். சில சிங்களம் சார்பு ஊடகங்களில் ஆசாத் சாலி ஆகிய என்னை படுகொலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பலர் விருப்பமும் தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் இவற்றுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் அல்ல.

முஸ்லிம்கள் ஒற்றுமைப்படுவதன் மூலமே தமக்குரிய சவால்களை வெற்றிகொள்ள முடியும். எல்லோரும் ஒன்றுசேர்ந்து செயற்ட வேண்டும். அப்போது நாம் வெற்றிபெற முடியும். அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இவை தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டும். சிங்கள மக்களில் 99 சதவீதமானவர்கள் சிறந்தவர்கள் எனவும் இதன்போது ஆசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.


2 comments:

  1. அசாத் சாலி செம காமடி piece ஆகிட்டாரு....

    ReplyDelete
  2. Fahim-Kandy

    He is a lier. Jocker, He is not ason of SALIH. He is Brother of Mr.Been

    ReplyDelete

Powered by Blogger.