நாட்டில் தனியார் பஸ்களில் மாதாந்தம் 10 கோடி ரூபா கப்பம் பெறப்படுகிறதாம்
நாட்டில் தனியார் பஸ்களில் கப்பம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் மாதாந்தம் 10 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் கப்பமாக பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பஸ் உரிமையாளர்கள் மாதாந்த வருமானத்தில் 25 வீதத்தை இழக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை கப்பம் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பில் அறியக்கிடைத்தால் 1955 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமக்கு அறிவிக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்தார்.
Post a Comment