Header Ads



10 ரூபா, 2.000 ரூபாவுக்கு நிரந்தர விடுமுறை


TM
10 ரூபா மற்றும் 2,000 ரூபா நாணயத்தாள்கள் இனிமேல் அச்சடிக்கப்படமாட்டாதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 10 ரூபா நாணயக்குற்றியொன்று வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

'இனிமேல் நாம் 10 ரூபா தாள் வெளியிடமாட்டோம். பதிலாக குற்றி நாணயத்தையே வெளியிடுவோம். இருப்பினும் 2,000 ரூபா தாளையும் இனிமேல் அச்சடிக்க மாட்டோம். நாம் ஏற்கெனவே 20 ரூபா, 50 ரூபா, 100 ரூபா, 500 ரூபா, 1,000 ரூபா, 5,000 ரூபா தாள்களை வெளியிட்டுள்ளபடியால் 2,000 ரூபா தாளுக்கான தேவையில்லை' எனவும் அவர் கூறினார்.

2010 இல் 13.6 மில்லியன்  அழுக்கடைந்த நாணயத்தாள்களையும் 2011 இல் 137 தாள்களையும் மத்திய வங்கி சுழற்சியிலிருந்து அகற்றியுள்ளது. இவ்வாறு மீளப்பெறும் தாள்களுக்கு பதிலாக காலத்துக்காலம் புதிய தாள்கள்  வெளியிடப்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் கூறினார்.

No comments

Powered by Blogger.